பொதுமக்கள் கேட்டதை தனது வாக்குறுதியாக அச்சிட்டு கொடுத்த அதிமுக வேட்பாளர்

பொதுமக்களின் தேவைகளை தனது தேர்தல் வாக்குறுதியாக அச்சிட்டு, தேனி நகராட்சி 29வது வார்டு அதிமுக வேட்பாளர் ஆசிரியை ஷீலா வீடு, வீடாக வழங்கினார்.;

Update: 2022-02-10 05:45 GMT

தேனி இருபத்தி ஒன்பதாவது வார்டு அதிமுக வேட்பாளர் ஷீலா தனது தேர்தல் வாக்குறுதிகளை நோட்டீஸ் ஆக அச்சிட்டு வீடு தோறும் வழங்கினார்.

தேனி நகராட்சி 29வது வார்டில் பள்ளி முதுகலை பட்டதாரி ஆங்கில ஆசிரியை ஷீலா அதிமுக., வேட்பாளராக களம் இறங்கி உள்ளார். இவர் இரட்டை இலைக்கு ஓட்டு கேட்டு சென்றபோது, பொதுமக்கள் தங்களது கோரிக்கைகளை சொல்லி மனம் குமுறினர். இதனை குறித்துக் கொண்ட ஆசிரியை ஷீலா, அத்தனை கோரிக்கைகளையும் தனது தேர்தல் வாக்குறுதியாக மாற்றி இரவோடு இரவாக நோட்டீஸ் அச்சிட்டு, இன்று காலை வீடு, வீடாக சென்று கொடுத்தார். ஆசிரியையின் வேகத்தையும், தங்களது கோரிக்கையை தேர்தல் வாக்குறுதியாக கொடுத்த நேர்த்தியையும் கண்ட மக்கள் வியந்து பாராட்டினர்.

Tags:    

Similar News