நாடு முழுவதும் இன்று தனியார் மருத்துவமனைகள் இயங்காது
ராஜஸ்தானில் டாக்டர் அர்ச்சனா சர்மா தாக்கப்பட்டதை கண்டித்து, இன்று ஒரு நாள் நாடு முழுவதும் தனியார் மருத்துவமனைகள் ஸ்டிரைக் அறிவித்துள்ளன.;
ராஜஸ்தானில் டாக்டர் அர்ச்சனா சர்மா மீது ஒரு கும்பல் கொலை வெறி தாக்குதல் நடத்தியது. இதனை கண்டித்தும், தாக்கிய கும்பலை கைது செய்ய வலியுறுத்தியும் இன்று இந்தியன் மெடிக்கல் அசோசியேஷன் ஒரு நாள் ஸ்டிரைக் அறிவித்துள்ளது. இதன்படி இன்று காலை 6 மணி முதல் இரவு 8 மணி வரை நாடு முழுவதும் தனியார் மருத்துவமனைகள் இயங்காது. நோயாளிகளின் அவசர அவசியம் கருதி, அனைத்து மருத்துவமனைகளிலும் அவசர சிகிச்சை பிரிவும், அதிதீவிர சிகிச்சை பிரிவும் மட்டும் இயங்கும் என டாக்டர்கள் சங்கம் அறிவித்துள்ளது.