தேனி அருகே தனியார் பஸ் மோதி ஏற்பட்ட விபத்தில் 2 பேர் பலி

Accident News - தேவாரம் அருகே டூ வீலர் மீது தனியார் பஸ் மோதிய விபத்தில் இருவர் உயிரிழந்தனர்.;

Update: 2022-06-29 04:17 GMT

பைல் படம்.

Accident News - தேனி மாவட்டம், தேவாரம் அழகர்நாயக்கன்பட்டி வடக்கு காலனியை சேர்ந்த கூலித்தொழிலாளர்கள் சுப்புராஜ்(வயது 25,) சுருளிராஜ்,(வயது 45.). இவர்கள் இருவரும் போடிக்கு இருசக்கரவாகனத்தில் சென்று விட்டு, அழகர்நாயக்கன்பட்டிக்கு திரும்பிக் கொண்டிருந்தனர். சுருளிராஜ் டூ வீலரை ஓட்டி வந்தார். லட்சுமிநாயக்கன்பட்டி சமத்துவபுரம் அருகே எதிரே வந்த தனியார் பஸ் டூ வீலர் மீது மோதியது. இதில் சுப்புராஜ் சம்பவ இடத்திலேயே இறந்தார். சுருளிராஜ் போடி அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்படும் வழியில் இறந்தார். தேவாரம் போலீசார் பஸ் டிரைவர் இமானுவேலை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

அடுத்த முக்கியமான செய்திகளை தெரிந்துகொள்ள: Click Here-1, Click Here-2

Tags:    

Similar News