தேனியிலிருந்து மதுரைக்கு கொண்டு செல்லப்பட்ட கைதி தப்பி ஓட்டம்
போடி சிறைக்காடு கிராமத்தை சேர்ந்த நபர் போலீஸ் பிடியில் இருந்து தப்பிச்சென்றுள்ளார்.;
போலீசிடம் தப்பிய கைதி ஏசுராஜ்.
போடி சிறைக்காடு கிராமத்தை சேர்ந்தவர் ஏசுராஜ். இவர் சில வழக்குகளில் கைது செய்யப்பட்டு தேனி சிறையில் அடைக்கப்பட்டிருந்தார். இந்நிலையில், தேனி சிறையில் இருந்து மதுரை சிறைக்கு கொண்டு சென்றனர். பஸ்சில் செல்லும் போது ஆண்டிபட்டி கணவாய் அருகே பஸ்சில் இருந்து இறங்கிய ஏசுராஜ் தப்பி ஓடி விட்டார். போலீஸார் தேடி வருகின்றனர்.