தொடர் மழையால் 'எகிறாத' காய்கறிகளின் விலை
Vegetable Price Today -தொடர் மழையிலும் தேனி மாவட்டத்தில் காய்கறிகளின் விலை மிகவும் சீரான நிலையில் உள்ளது.
Vegetable Price Today -தேனி மாவட்டத்திற்கு, தோட்டக்கலை மாவட்டம் என்ற சிறப்பு பெயர் உண்டு. அந்த அளவுக்கு, இங்கு காய்கறிகளின் விளைச்சல் அதிகம் உள்ளது. கடந்த நான்கு நாட்களாக, இடைவிடாமல் மழை பெய்தும், தேனி மாவட்டத்தில் காய்கறிகளின் விலை உயரவில்லை. காரணம், காய்கறிகளின் விளைச்சல் அதிகரித்துள்ளது.
தேனி மாவட்டத்தில் தேனி, வீரபாண்டி, தேவாரம், கம்பம், சின்னமனுார் மார்க்கெட்டுகள் காய்கறிகளின் விற்பனைக்கு பெயர் பெற்றவை. இங்கிருந்து மதுரை, திண்டுக்கல், ஒட்டன்சத்திரம், திருச்சி மார்க்கெட்டுகளுக்கும், கேரளாவிற்கும் காய்கறிகள் அதிகளவில் கொண்டு செல்லப்படுகின்றன. தற்போதைய நிலையில், தினமும் சராசரியாக 200 டன்களுக்கும் அதிகளவில் காய்கறிகள், தேனி மாவட்டத்தில் இருந்து வெளியூர் கொண்டு செல்லப்படுகிறது.
தவிர சீலையம்பட்டியில் இருந்து புதினா, கறிவேப்பிலை, மற்றும் கீரை வகைகள் சென்னை, பெங்களூரு போன்ற பெரிய நகரங்களில் உள்ள ஸ்டார் ஓட்டல்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டு வருகின்றன. கடந்த நான்கு நாட்களாக, தேனி மாவட்டத்தில் பலத்த மழை பெய்தாலும், தினமும் சராசரியாக 3 மணி நேரம் முதல் 4 மணி நேரம் மட்டுமே மழைப்பொழிவு இருந்தது. மற்ற நேரங்களில் காய்கறிகள் பறிக்கும் பணியும், பேக்கிங் செய்து, இதர மார்க்கெட்டுகளுக்கு அனுப்பும் பணிகளும் நடைபெற்று வந்தன.
இதனால் காய்கறிகளின் விலை, மாவட்டத்தில் தொடர்ந்து கட்டுப்பாட்டிலேயே இருந்து வருகிறது.
இன்று தேனி உழவர்சந்தையில் முதல்தர கத்தரிக்காய் ஒரு கிலோ 23 ரூபாய்க்கும், தக்காளி 16 ரூபாய்க்கும், வெண்டைக்காய் 20 ரூபாய்க்கும், கொத்தவரங்காய் 25 ரூபாய்க்கும், சுரைக்காய் 15 ரூபாய்க்கும், புடலங்காய் 25 ரூபாய்க்கும், பாகற்காய் 50 ரூபாய்க்கும், பீர்க்கங்காய் 45 ரூபாய்க்கும், முருங்கைக்காய் 60 ரூபாய்க்கும், பூசணிக்காய் 18 ரூபாய்க்கும், அவரைக்காய் 50 ரூபாய்க்கும், தேங்காய் கிலோ 28 ரூபாய்க்கும், உளுளைக்கிழங்கு 44 ரூபாய்க்கும், கருணைக்கிழங்கு 25 ரூபாய்க்கும், சேப்பங்கிழங்கு 25 ரூபாய்க்கும், கருவேப்பிலை 30 ரூபாய்க்கும், கொத்தமல்லி 25 ரூபாய்க்கும், புதினா 30 ரூபாய்க்கும், சின்னவெங்காயம் 70 ரூபாய்க்கும், பெல்லாரி 40 ரூபாய்க்கும், பீட்ரூட் 30 ரூபாய்க்கும், நுால்கோல் 28 ரூபாய்க்கும், முள்ளங்கி 18 ரூபாய்க்கும், முருங்கை பீன்ஸ் 45 ரூபாய்க்கும், பட்டர்பீன்ஸ் 200 ரூபாய்க்கும், பீன்ஸ் 35 ரூபாய்க்கும், முட்டைக்கோஸ் 30 ரூபாய்க்கும், காரட் 45 ரூபாய்க்கும், டர்னிப் 30 ரூபாய்க்கும், சவ்சவ் 18 ரூபாய்க்கும், காலிபிளவர் 20 ரூபாய்க்கும் விற்கப்படுகிறது.
அதேபோல் பழங்களின் விலைகளும் கட்டுப்பாட்டில் உள்ளது. எலுமிச்சை பழம் கிலோ 60 ரூபாய்க்கும், பப்பாளிப்பழம் 100 ரூபாய்க்கும், திராட்சை 80 ரூபாய்க்கும், மாதுளை பழம் 180 ரூபாய்க்கும், கொய்யா 60 ரூபாய்க்கும், சிகப்பு கொய்யா 120 ரூபாய்க்கும் விற்கப்படுகிறது.
அடுத்த முக்கியமான செய்திகளை தெரிந்துகொள்ள: Click Here-1, Click Here-2