வழக்கறிஞர் கொலை குற்றவாளிகளை பிடிக்க உதவிய போலீஸ் ஏட்டுக்கு பாராட்டு
உத்தமபாளையம் வழக்கறிஞர் கொலைக் குற்றவாளிகளை பிடிக்க உதவிய போலீஸ் ஏட்டுக்கு எஸ்.பி., பிரவீன் உமேஷ் டோங்கரே பாாட்டுச்சான்று வழங்கினார்.
கடந்த 17ம் தேதி உத்தமபாளையத்தில் காரில் வந்த மர்ம கும்பல் பட்டப்பகலில் வக்கீல் மதன் என்பவரை வெட்டி கொலை செய்து விட்டு தப்பியது. இந்த கொலைக்கும்பலை எஸ்.பி., போலீஸ் ஏட்டு ராமமூர்த்தி டூ வீரில் 10 கி.மீ., துாரம் வரை துரத்திச் சென்றார். வழியில் அவர்கள் செல்லும் லொகசேனை எஸ்.பி., அலுவலகத்துடன் ஷேர் செய்து கொண்டே சென்றார். போலீஸ் படையினர் இவரை பின்பற்றி விரைந்து செயல்பட்டனர்.
இதனால் சம்பவம் நடந்த சில நிமிடங்களில் குற்றவாளிகள் நான்கு பேரையும் போலீசார் கைது செய்து விசாரணைக்கு உட்படுத்தி உள்ளனர். எஸ்.பி., தனிப்பிரிவு ஏட்டு ராமமூர்த்தியின் இந்த செயல்பாட்டை பாராட்டி எஸ்.பி., பிரவீன்உமேஷ் டோங்கரே சான்றும், பரிசும் வழங்கினார்.