தேனி மாவட்டத்தில் ஒரு லட்சம் குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து

தேனி மாவட்டத்தில் ஒருலட்சம் குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து வழங்கப்பட்டது.

Update: 2022-02-27 13:36 GMT

பைல் படம்.

தேனி மாவட்டத்தில் இன்று ஒரு லட்சத்து இரண்டாயிரம் குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து கொடுக்கப்பட்டது.

இதற்காக தேனிஅரசு மருத்துவக் கல்லுாரி மருத்துவமனை, அரசு மருத்துவமனைகள், ஆரம்ப சுகாதார நிலையங்கள், துணை சுகாதார நிலையங்கள், பஸ்ஸ்டாண்டுகள், முக்கிய ரோடு சந்திப்புகள், அங்கன்வாடி மையங்கள் உட்பட மாவட்டம் முழுவதும் 823 சொட்டு மருந்து மையங்கள் அமைக்கப்பட்டிருந்தது.

இப்பணியில் 3586 பணியாளர்கள் ஈடுபட்டனர். ஒரே நாளில் ஒரு லட்சத்து இரண்டாயிரம் குழந்தைகளுக்கு சொட்டு மருந்து வழங்கப்பட்டது. விடுபட்ட குழந்தைகளுக்கு நாளையும், நாளை மறுநாளும் வீடு, வீடாக சென்று போலியோ சொட்டு மருந்து வழங்கும் பணி நடைபெறும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.

Tags:    

Similar News