கருப்பு பூஞ்சையால் பாதிக்கப்பட்ட எஸ்.ஐ.,க்கு போலீசார் நிதியுதவி

கருப்பு பூஞ்சை நோயால் பாதிக்கப்பட்ட போலீஸ் எஸ்.ஐ.,க்கு தேனி போலீசார் இணைந்து சிகிச்சைக்கு நிதி உதவி வழங்கினர்.

Update: 2021-07-28 14:00 GMT

வீட்டிற்கே சென்று நிதியுதவி வழங்கிய போலீசார்.

தேனி மாவட்டம், வீரபாண்டி போலீஸ் ஸ்டேஷனில் ஜோதிராஜ் என்பவர் உதவி ஆய்வாளராக பணியாற்றி வருகிறார். இவர் கருப்பு பூஞ்சை நோயால் பாதிக்கப்பட்டு சில நாட்களாக மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

இவரது சிகிச்சைக்கு உதவி செய்ய தேனி போலீஸ் டி.எஸ்.பி., சப்-டிவிசனில் பணிபுரியும் போலீசார் அனைவரும் இணைந்து ஒரு பெரும் தொகையினை சேர்த்தனர்.

இதற்கு எஸ்.பி., டோங்கரே பிரவீன் உமேஷ் தனது பங்களிப்பாக குறிப்பிட்ட நிதி உதவி வழங்கினார். மொத்தமாக சேர்ந்த நிதியை தேனி டி.எஸ்.பி., முத்துராஜ், பழனிசெட்டிபட்டி எஸ்.ஐ., மதனகலா மற்றும் அதிகாரிகள் எஸ்.ஐ., ஜோதிராஜ் வீட்டிற்கு சென்று வழங்கினர்.

தனது சிகிச்சைக்கு நிதி உதவி வழங்கிய அனைவருக்கும் உதவி ஆய்வாளர் ஜோதிராஜ் தனது நன்றிகளை தெரிவித்தார்.

Tags:    

Similar News