கஞ்சா அறுவடை செய்து பதுக்கிய 5 பேர் கைது
வருசநாடு மலைப்பகுதிகளில் கஞ்சா சாகுபடி செய்து வீட்டில் பதுக்கி வைத்திருந்த ஐந்து பேரை போலீசார் கைது செய்தனர்;
ஆண்டிபட்டி தாலுகா வருஷநாடு அருகே உள்ள தண்டியகுளம் வனப்பகுதியில் கஞ்சா சாகுபடி செய்து, அறுவடை முடித்து வீட்டில் பதுக்கி வைத்திருந்தனர். தகவல் அறிந்த எஸ்.ஐ., அருண்பாண்டியன் தலைமையிலான போலீசார் கஞ்சா பதுக்கிய பழனிச்சாமி( 57), பெருமாள்( 36,) சந்திரன்( 45,) பெருமாள்( 65,) செல்வம்(, 60 )ஆகிய ஐந்து பேரை கைது செய்தார். இவர்கள் பதுக்கி வைத்திருந்த 17 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது.