இந்த ஆண்டில் உயிரிழந்த போலீஸாரின் எண்ணிக்கை 400 ஐ தாண்டியது

தமிழகத்தில் இந்த ஆண்டு பணியில் இருக்கும் போதே இறந்த போலீஸ் மற்றும் அதிகாரிகளின் எண்ணிக்கை 400 ஐ தாண்டியது;

Update: 2021-12-22 12:45 GMT

பல்வேறு காரணங்களுக்காக இந்த ஆண்டு இறந்த போலீஸ் மற்றும் அதிகாரிகளின் எண்ணிக்கை 400ஐ தாண்டி உள்ளது.

தமிழக போலீசில் பொதுவாகவே பணிச்சுமை மிக, மிக அதிகம். இதர வடமாநிலங்களை போன்றோ, கேரளா போன்றோ போலீசார் தமிழகத்தில் மிகவும் அஜாக்கிரதையாக நடந்து கொள்வதில்லை. மிகப்பெரும்பாலான போலீசாரும், அதிகாரிகளும் அதீத பொறுப்புணர்வுடன் தான் நடந்து கொள்கின்றனர்.  நிச்சயம் இதர மாநிலங்களை ஒப்பிடுகையில் தமிழக போலீசாரை குறை சொல்ல முடியாது. இதற்கு இந்த ஆண்டு இறந்த போலீசாரின் எண்ணிக்கையே சான்று. இந்த ஆண்டு மட்டும் நோய் பாதிப்பு, உடல் நலக்குறைபாடு, விபத்து, கொரோனா தொற்று பாதிப்பு உட்பட பல்வேறு காரணங்களால் பணியில் இருக்கும் போது உயிரிழந்த போலீசாரின் எண்ணிக்கை மட்டும் 400ஐ தாண்டி உள்ளது.

இந்த தகவலை போலீசார் தங்களது சமூக வலைதள போலீஸ் குழுக்களில் பதிவு செய்து வருகின்றனர். போலீசாரின் உடல் ஆரோக்கியம், மனஆரோக்கியத்தை மேம்படுத்தினால் இந்த இறப்புகளின் எண்ணிக்கையினை பெருமளவில் குறைக்கலாம் என போலீசார் அதில் தங்கள் கருத்துகளை பதிவிட்டு வருகின்றனர்.

Tags:    

Similar News