என்னை தாண்டி தொட்டுப்பார்...! பிரதமர் மோடி ஆவேசம்....!

இந்த மோடி உயிரோடிருக்கும் வரை தலித்துகள் இட ஒதுக்கீட்டை யாரும் பறிக்க முடியாது என பிரதமர் மோடி பிரசாரம் செய்தார்.

Update: 2024-05-24 04:00 GMT

ஐந்து கட்ட தேர்தல்கள் நடந்து முடிந்த நிலையில் ஆறாம் கட்ட தேர்தலுக்கான பிரச்சாரமும் நிறைவடைந்தது. வரும் திங்கள் கிழமை ஆறாம் கட்ட தேர்தல் ஓட்டுப்பதிவு நடக்கிறது. இந்நிலையில் தலைவர்கள் பிரச்சாரம் உச்சத்தை எட்டி உள்ளது.

ஹரியானா மாநிலம் பிவானியில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் பிரதமர் மோடி பங்கேற்று பேசினார். அப்போது, மேற்கு வங்கத்தில் ஒரே இரவில் ஊடுறுவல்காரர்களுக்கு ஓபிசி சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளதாகவும், அதுவும் அதுவும் பக்கத்து நாடுகளை சேர்ந்த ஊடுறுவல்காரர்களுக்கு ஓபிசி சான்றிதழ்கள் அளிக்கப்பட்டுள்ளதாகவும் புகார் தெரிவித்தார்.

இதுதொடர்பாக கொல்கத்தா உயர் நீதிமன்ற தீர்ப்பை ஏற்க மறுத்த மேற்கு வங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜிக்கு பிரதமர் மோடி கண்டனம் தெரிவித்தார். காங்கிரஸ் மற்றும் இண்டியா கூட்டணி தலைவர்களுக்கு நாட்டை விட வாக்கு வங்கி தான் முக்கியம் என்றும், வாக்கு வங்கிக்காக நாட்டை துண்டாட நினைப்பதாகவும் பிரதமர் ஆவேசமாக குறிப்பிட்டார்.

மோடி உயிருடன் இருக்கும் வரை தலித்துகள் அல்லது பழங்குடியினருக்கான இட ஒதுக்கீட்டை யாராலும் பறிக்க முடியாது என உறுதியளிப்பதாகவும், இது மோடியின் உத்தரவாதம் என்றும் பிரதமர் தெரிவித்தார். பிரதமரின் இந்த ஆவேசம் வாக்காளர்கள் மத்தியில் பெரும் பரபரப்பினை கிளப்பி உள்ளது.

Tags:    

Similar News