இந்திய இளைஞர்களை கலங்கடித்த மோடியின் செல்பி..!
லட்சத்தீவுகளில் மோடி எடுத்த ஒரு போட்டோ, பக்கத்து நாட்டின் பொருளாதாரத்தையே ஸ்தம்பிக்க வைத்தது.
லட்சத்தீவில் பிரதமர் மோடி எடுத்துக்கொண்ட புகைப்படங்கள் உலகம் முழுவதும் வைரலானது நாம் அறிந்ததே. அதேபோல பிரதமர் மோடி காஷ்மீரில் பதிவிட்ட ஒரு போட்டோ, இந்திய இளைஞர்களின் வாழ்க்கையை திருப்பிப் போடக்கூடிய சக்தி படைத்தது. காஷ்மீரை கட்டி போட்டு வைத்திருந்த சட்டப்பிரிவு 370 நீக்கிய பின்பு, முதல் முறையாக காஷ்மீருக்கு சென்ற மோடி, பல்லாயிரக்கணக்கான கோடி மதிப்பிலான திட்டங்களை துவங்கியிருந்தார். அதில் பெரும்பாலான திட்டங்கள் விவசாயத்தையும் சுற்றுலா துறையையும் மையப்படுத்தி இருந்தன. அந்த இரண்டிலும் காஷ்மீர் மிகப்பெரிய உச்சத்தை தொடும் என்று மோடி அறிவித்திருந்தார்.
அதிலும் நசீர் என்ற இளைஞரோடு அவர் எடுத்த செல்பி புகைப்படத்தை அவர் பகிர்ந்த போது அது சமூக வலைத்தளங்களில் மிகப்பெரிய வைரலானது. காஷ்மீரில் தன்னுடைய 10 ஆம் வகுப்பில் இருந்து தேனீ வளர்ப்பில் ஈடுபட்டு வந்திருந்தவர் நசீம் நசீர் என்ற இளைஞன்.
பிரதம மந்திரி இளைஞர் வேலை வாய்ப்பு திட்டத்தில், 2018 ஆம் ஆண்டில் ஒரு 25 தேனீ பெட்டிகளை 50% மானியத்தில் வாங்குகிறார். அதிலிருந்து கிடைத்த ஒரு 75 கிலோ தேனை சேகரித்து கிராமங்களில் விற்று ஒரு அறுபதாயிரம் ரூபாய் சம்பாதிக்கிறார். இது அவருக்கு மிகப்பெரிய உந்து சக்தியாக மாறி தன்னுடைய வியாபாரத்தை விரிவுபடுத்தி, 2020 ஆண்டு வாக்கில் ஒரு வருடத்திற்கு ஆயிரம் கிலோ தேன் விற்பனை செய்யும் அளவிற்கு வளர்ந்து நிற்கிறார்.
பிரதமர் மோடியின் திட்டத்தால் தன்னிறைவு பெற்ற ஒரு தொழில் முனைவோராக இன்று உயர்ந்து நிற்கும் நசீர், இந்திய இளைஞர்களுக்கு மிகப்பெரிய முன்னுதாரணம் !!
ஒரு பக்கம் கஞ்சா போன்ற அபாயகரமான போதை வஸ்துக்களோடு பல்வேறு மாநிலங்கள் சீரழிந்து கொண்டிருக்கும் நிலையில் அரசுக்கு எதிராக, ராணுவத்திற்கு எதிராகவே கல் எரிந்து கொண்டிருந்த ஒரு மாநிலத்தின் இளைஞர்களை, முற்றிலுமாக வளர்ச்சிப் பாதையில் அழைத்துக் கொண்டு சென்றிருக்கிறார் பாரத பிரதமர் நரேந்திர மோடி. அதோடு காஷ்மீருக்கான தன்னுடைய அடுத்த மிஷனையும் தெளிவுபடுத்தி இருந்தார் மோடி.
டெஸ்டினேஷன் வெட்டிங் என்ற பெயரில், பல ஆடம்பர திருமணங்கள் எல்லாம் வெளிநாட்டில் போய் நடத்திக் கொள்கிறார்கள். வெளிநாட்டில் இருக்கும் இயற்கை அழகுக்கும், சுற்றுலா வசதிகளுக்கும் நம் நாட்டில் இருக்கும் காஷ்மீர் எந்த விதத்திலும் சளைத்தது அல்ல. அப்படியாகப்பட்ட கனவு திருமணங்கள் எல்லாம் இனிவரும் காலங்களில் காஷ்மீரில் நடக்கும் என்ற அளவுக்கு அங்கே சுற்றுலாத் துறையின் கட்டமைப்பை பலப்படுத்தப் போவதாக மோடி அறிவித்துள்ளார்.
உலகம் முழுக்க இருக்கும் சுற்றுலா பயணிகள் காஷ்மீரில் இனி குவிவார்கள் என்ற நம்பிக்கை அம்மாநில மக்களுக்கு பிறந்துள்ளது. ஆனால் ஒரே ஒரு தேசப்பற்று உள்ள தலைவன் எப்படிப்பட்ட புரட்சிகரமான மாற்றங்களை நிகழ்த்திக் காட்ட முடியும் என்பதையும் கடந்த 10 ஆண்டுகளாக பார்த்துக் கொண்டிருக்கிறோம். இனியும் நாம் யோசிக்க என்ன இருக்கிறது? இந்தியாவின் கனவுகள் மெய்ப்பட ... மீண்டும் மோடி !! வேண்டும் மோடி !!