தேர்வு எழுதச் சென்ற பிளஸ் 1 மாணவன் தனியார் பஸ் மோதி உயிரிழப்பு
தனியார் பஸ் மோதிய விபத்தில் பள்ளியில் தேர்வு எழுதச் சென்ற பிளஸ் 1 வகுப்பு மாணவன் உயிரிழந்தார்.;
உத்தமபாளையம் அருகே தே.ரெங்கநாதபுரத்தை சேர்ந்தவர் சந்ரு, (வயது பதினாறு). இவர் ராயப்பன்பட்டியில் உள்ள தனியார் பள்ளியில் பிளஸ் ஒன் படித்து வந்தார். இன்று தேர்வு எழுதவந்து கொண்டிருந்த பே ாது,கோகிலாபுரம் விலக்கில் தனியார் பஸ் மோதியது. இந்த விபத்தில் பலத்த காயமடைந்த சந்ரு, சம்பவ இடத்திலேயே பலியானார். ராயப்பன்பட்டி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.