இன்றுடன் தொடர்ந்து 14வது நாளாக பெட்ரோல், டீசல் விலையில் மாற்றமில்லை
இன்றுடன் தொடர்ந்து 14வது நாளாக பெட்ரோல், டீசல் விலையில் மாற்றமில்லை என தேனி பங்க் உரிமையாளர்கள் தெரிவித்தனர்.;
இன்றுடன் தொடர்ந்து 14வது நாளாக பெட்ரோல், டீசல் விலையில் மாற்றமில்லை என பங்க் உரிமையாளர்கள் தெரிவித்தனர்.
நாடு முழுவதும் பெட்ரோல், டீசல் விலைகள் தினமும் மாற்றி அமைக்கப்பட்டு வந்தன. இந்நிலையில் வடமாநிலங்களில் நடைபெற்ற இடைத்தேர்தல்களில் பா.ஜ.,விற்கு பின்னடைவு ஏற்பட்டது.
இதனைத் தொடர்ந்து தேர்தல் முடிவுகள் வெளியான மறுநாளே பெட்ரோல் லிட்டருக்கு 5 ரூபாயும், டீசல் லிட்டருக்கு 10 ரூபாயும் விலை குறைக்கப்பட்டது.
அதன் பின்னர் இன்றுடன் 14வது நாளாக விலையில் இதுவரை எந்த மாற்றமும் செய்யப்படவில்லை. தேனியில் பெட்ரோல் விலை லிட்டருக்கு 102.48 ரூபாய், டீசல் 91.42 ரூபாய் ஆக விற்கப்படுகிறது என பங்க் உரிமையாளர்கள் தெரிவித்தனர்.