பெருந்தலைவர் மக்கள் கட்சித்தலைவரின் பிறந்தநாள்: நலத்திட்ட உதவி வழங்கல்

தேனியில் பெருந்தலைவர் மக்கள் கட்சியினர் என்.ஆர்.தனபாலன் பிறந்தநாளை கொண்டாடினர்;

Update: 2022-01-03 12:15 GMT

தேனியில் பெருந்தலைவர் மக்கள் கட்சியினர் அக்கட்சி தலைவர் என்ஆர்.தனபாலன் பிறந்தநாளை இனிப்புடம் நலத்திட்டஉதவி வழங்கிக் கொண்டாடினர்.

தேனியில் பெருந்தலைவர் மக்கள் கட்சியினர் என்.ஆர்.தனபாலன் பிறந்தநாள் விழாவை  நலத்திட்ட உதவிகள் வழங்கி அக்கட்சியினர் கொண்டாடினர். தேனி மேலப்பேட்டை இந்து நாடார் உறவின்முறை அலுவலகம் முன்பு நடைபெற்ற இந்த நிகழ்ச்சிக்கு, மாவட்ட தலைவர் ஜி.வி.அருள்பிரகாஷ் தலைமை வகித்தார்.

மாவட்ட செயலாளர் ஆர்.குமரேசபாண்டியன், மாவட்ட பொருளாளர் என்.பி.நாராயணன், மாவட்ட துணைத்தலைவர் எம்.எஸ்.அய்யாக்காளை, தேனி நகர தலைவர் பி.கிருஷ்ணன், நகரச்செயலாளர் ஆர்.பாண்டியராஜன், நகர துணைத்தலைவர் எஸ்.வேல்பாண்டி, போடி நகர தலைவர் ஆர்.பன்னீர்செல்வம் உட்பட பலர் பங்கேற்றனர். இனிப்பு வழங்கி பிறந்தநாள் விழாவை கொண்டாடிய பின்னர், ஏழை எளியோருக்கு  நலத்திட்ட உதவிகள் வழங்கினர்.

Tags:    

Similar News