தேனியில் இணைந்தன பெரியாறு வைகை பாசன மற்றும் தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்கம்

பெரியாறு வைகை பாசன விவசாயிகள் சங்கமும் தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்கமும் தேனியில் ஒன்றாக இணைந்து உள்ளன.;

Update: 2023-09-18 16:45 GMT

பெரியாறு வைகை பாசன சங்கமும், தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்கமும் தேனியில் ஒன்றாக இணைந்தன.

சர்வதேச பொறியாளர் தினத்தன்று இன்றைய பொறியாளர்களின் முன்னத்தி ஏராய், பொறியாளர்கள் என்றாலே அர்ப்பணிப்பானவர்கள், தியாகம் நிறைந்தவர்கள் என்பதை உலகுக்கு சொல்லி சென்ற. முல்லைப்பெரியாறு அணையை கட்டிய  மாமனிதர் கர்ணன் பென்னிகுயிக் பெயர் தான் நினைவிற்கு வருகிறது.

அவரது திருவுருவப் படத்திற்கு பெரியாறு வைகை பாசன விவசாயிகள் சங்கமும், தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்கமும் இணைந்து தேனியில் கூடி மலர்மாலை அணிவித்து மரியாதை செய்தனர்.


தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்கத்தின் நிறுவனர் வழக்கறிஞர் ஈசன் முருகசாமி தலைமையில், அந்தச் சங்கத்தின் தலைவர் முத்து விசுவநாதன், பொதுச் செயலாளர் சண்முகசுந்தரம், துணைப் பொதுச் செயலாளர் உசிலை நேதாஜி உள்ளிட்ட அனைத்து நிலை நிர்வாகிகளும் இதில் கலந்து கொண்டனர்.

இரண்டு நாட்களுக்கு முன்னதாகவே இணைப்போடு கூடிய, 10 அம்ச விவசாய சங்க கோரிக்கைகளோடுடனான துண்டறிக்கை விநியோகத்தை, திருப்பூர் மாவட்ட பொறுப்பாளர் விஜயகுமார் தலைமையில்,  சங்கத்தின் உப்புக்கோட்டை செல்லத்துரை ஆகியோர் இணைந்து தேனி மாவட்டம் முழுவதும் விநியோகித்திருந்த நிலையில் கூட்டம் தொடங்கியது.

பெரியாறு வைகை பாசன விவசாயிகள் சங்கத்தின் வழிகாட்டும் குழு தலைவர் சலேத்து தலைமையில் தொடங்கிய நிகழ்வில், வழக்கறிஞர் ஈசன் முருகசாமி முன்னிலை வகித்தார்.

பெரியாறு வைகை பாசன விவசாயிகள் சங்கத்தின் நிர்வாகிகள் அனைவரிடமும் இணைப்புக்கான கருத்துரிமை கோரப்பட்டது.

சங்கத்தின் செயலாளர் தேவாரம் மகேந்திரன், சங்கத்தின் பொருளாளர் ராதா கணேசன், துணைத் தலைவர் மேகமலை ஜெயக்குமார், மற்றும் மத்திய கமிட்டி நிர்வாகிகள்  தேவாரம் சங்கர், கோட்டூர் ராஜா, சுப்பையா மீனாட்சிபுரம், உப்பார்பட்டி திருப்பதி, உப்புகோட்டை பொறியாளர் சரவணக்குமார், கம்பம் தவமணி, பொறியாளர் ராஜசேகர், மேல சிந்தலைச்சேரி தங்கராஜ், டி சிந்தலைசேரி சேகர்,காரல் மார்க்ஸ் உள்ளிட்ட அத்தனை பேரும் இணைப்புக்கு ஒப்புதல் வழங்கியதால் பெரியாறு வைகை பாசன விவசாயிகள் சங்கத்தின் தலைவர், பொன் காட்சி கண்ணன் இணைப்பை உறுதிப்படுத்தி கூட்டத்தை நிறைவு செய்தார்.

சங்கத்தின் இரண்டு முழு நேர ஊழியர்களாக மீனாட்சிபுரம் சுப்பையா, உப்புக்கோட்டை செல்லதுரை நியமிக்கப்பட்டனர். தமிழக விவசாயிகள் சங்கத்தின் மாநில பொறுப்புக்கு பெரியாறு வைகை பாசன விவசாயிகள் சங்கத்தின் மூன்று நிர்வாகிகள் தேர்வு செய்யப்பட்டு முறையான பொறுப்பு வழங்க முடிவு செய்யப்பட்டது.

Tags:    

Similar News