நெல் அறுவடை, தொடர் உழவுப்பணி: தேனி மாவட்ட விவசாயிகள் சுறுசுறுப்பு

தேனி மாவட்டத்தில் 25 ஆயிரம் ஏக்கர் பரப்பில் நெல் அறுவடை உழவு, நடவு பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகிறது.

Update: 2021-10-23 02:45 GMT

தேனி மாவட்டத்தில் முல்லை பெரியாறு பாசனத்தின் மூலம் 14 ஆயிரத்து 707 ஏக்கர் பரப்பில் நெல் சாகுபடி நடைபெறுகிறது. மஞ்சளாறு, கொட்டகுடி ஆறு, வராகநதி, சோத்துப்பாறை அணை, பிடிஆர் கால்வாய், 18ம் கால்வாய் என தேனி மாவட்டத்தின் அத்தனை கால்வாய்கள், அணைகளும் திறக்கப்பட்டு சாகுபடி பணிகள் நடைபெற்று வருகின்றன.

தற்போது முதல்போக நிலங்களில் அறுவடை பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகிறது. அறுவடை முடிந்த பகுதிகளில் அடுத்தடுத்து உழவு, இரண்டாம் போக நடவு பணிகள் நடைபெற்று வருகின்றன. ஒரே நேரத்தில் மாவட்டம் முழுவதும் நெல் அறுவடை, உழவு, நடவு என பணிகள் நடப்பதால் விவசாயிகள் முழு வீச்சுடன் பணிபுரிந்து வருகின்றனர். அறுவடை செய்யப்பட்ட நெல்லை கொள்முதல் செய்ய மாவட்டத்தில் 12 இடங்களில் கொள்முதல் மையங்கள் திறக்கப்பட்டுள்ளன.

Tags:    

Similar News