பெரியகுளம் ரோட்டோரம் புளியமரங்கள் வெட்டப்படுவதால் மக்கள் கடும் அதிருப்தி
தேனியில் இருந்து பெரியகுளம் செல்லும் ரோட்டோரம் வளர்ந்திருந்த புளியமரங்களை வெட்டி அகற்றும் பணிகள் நடந்து வருகின்றன.;
தேனியில் இருந்து பெரியகுளம், கம்பம், மதுரை ரோட்டோரங்களில் அதிகளவு புளியமரங்கள் வளர்ந்திருந்தன. குறிப்பாக இந்த ரோடுகளில் நிழலிலேயே பயணிக்கும் அளவு புளியமரங்கள் பல கி.மீ., துாரம் வளர்ந்திருந்தன.
ஆனால் தேசிய, மாநில நெடுஞ்சாலைத்துறைகளும், நான்கு வழிச்சாலை ஆணையமும் ரோடு விரிவாக்க பணிகளுக்காக இந்த ரோட்டோரம் வளர்ந்திருந்த புளியமரங்களை வெட்டி அகற்றி விட்டனர். வெட்டப்பட்ட மரங்களுக்கு இணையாக இதுவரை ஒரு மரம் கூட எங்குமே நட்டு வளர்க்கப்படவில்லலை.
இந்நிலையில் வளர்ந்து வெட்டப்படாமல் மீதம் உள்ள சில புளியமரங்களையும் தற்போது தேசிய நெடுஞ்சாலைத்துறையினர் வெட்டி அகற்றி வருகின்றனர். இதற்கு மக்கள் மத்தியில் கடும் அதிருப்தி ஏற்பட்டுள்ளது. இதுவரை வெட்டப்பட்ட மரங்களுக்கு இணையாக அல்லது அதனை விட பல மடங்கு அதிகமாக மரக்கன்றுகள் அமைத்து பலன் தரும் மரங்களை நடவு செய்ய வேண்டும் என மக்கள் அறிவுறுத்தி உள்ளனர்.