மனஅழுத்தத்தால் நெஞ்சுவலி; துணைத்தலைவருக்கு தீவிர சிகிச்சை

தி.மு.க. தலைமையின் அழுத்தம் காரணமாக பெரியகுளம் நகராட்சி துணைத்தலைவர் ராஜாமுகமது மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதி

Update: 2022-03-08 15:40 GMT
தேனி தனியார் மருத்துவுமனையில் சிகிச்சை பெறும் பெரியகுளம் நகராட்சி துணைத்தலைவர் ராஜாமுகமது.

பெரியகுளம் நகராட்சி தலைவராக தி.மு.க.,வை சேர்ந்த சுமிதா சிவக்குமார் தேர்வு செய்யப்பட்டுள்ளார். பெரியகுளம் நகராட்சி துணைத்தலைவர் பதவி விடுதலை சிறுத்தைகள் கட்சிக்கு ஒதுக்கப்பட்டு இருந்தது. ஆனால் தி.மு.க.,வை சேர்ந்த ராஜாமுகமது துணைத்தலைவர் பதவியை கைப்பற்றினார்.

ஆனால் முதல்வர் ஸ்டாலின் உத்தரவுப்படி அவரை பதவி விலகுமாறு தி.மு.க. நிர்வாகிகள் நெருக்கடி கொடுத்தனர். இதனால் கடும் மனஉலைச்சலுக்கு ஆளான ராஜாமுகமதுவுக்கு இன்று கடும் நெஞ்சுவலி ஏற்பட்டது. அவர் தேனி தனியார் மருத்துவமனை தீவிர சிகிச்சை பிரிவில் சேர்க்கப்பட்டுள்ளார். பெரியகுளம் நகராட்சி தலைவர் சுமிதா சிவக்குமார், நகர செயலாளர் முரளி உட்பட முக்கிய பிரமுகர்கள் அவரை சந்தித்து நலம் விசாரித்தனர்.

இது குறித்து நகராட்சி துணைத்தலைவர் ராஜாமுகமது, அவரது தம்பி அப்துல்சமது கூறுகையில், 'பெரியகுளத்தில் விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் போட்டியிட்ட இரண்டு பேரும் தோல்வியடைந்து விட்டனர். விடுதலை சிறுத்தைகள் வேட்பாளரை எதிர்த்து சுயேட்சையாக போட்டியிட்டு, அக்கட்சியின் வேட்பாளர்களை தோற்கடித்து வெற்றி பெற்றவர், தற்போது அக்கட்சியில் சேர்ந்து கொண்டு துணைத்தலைவர் பதவி கேட்கிறார். இதில் எந்த நியாயமும் இல்லை. இதனை தி.மு.க., தலைமை பரீசீலிக்க வேண்டும். கூட்டணி கட்சியான விடுதலை சிறுத்தை கட்சி வேட்பாளர்கள் வெற்றி பெற்றிருந்தால் நாங்கள் பதவியை விட்டுக் கொடுத்திருப்போம். தற்போதய சூழலில் எப்படி விட்டுத்தர முடியும். நாங்கள் தி.மு.க.,தலைமைக்கு கட்டுப்பட்டவர்கள் என்றார்.

Tags:    

Similar News