தேனியில் துாய்மைக்கான மக்கள் இயக்க பேரணி
தேனி பங்களாமேட்டில் நடைபெற்ற விழிப்புணர்வு பேரணியை கலெக்டர் முரளீதரன் தொடங்கி வைத்தார்;
முன்னாள் முதல்வர் கருணாநிதி பிறந்தநாள் விழாவை முன்னிட்டு தேனியில் துாய்மை இயக்க பேரணியை கலெக்டர் முரளீதரன் தொடங்கி வைத்தார்.
தேனி பங்களாமேட்டில் இருந்து தொடங்கிய இந்த பேரணியை கலெக்டர் முரளீதரன் தொடங்கி வைத்தார்.
முன்னதாக துாய்மைக்கான மக்கள் இயக்க பணிகள் குறித்த உறுதிமொழிகளை எடுத்துக் கொண்டனர். தன்னார்வலர்கள் பங்கேற்ற இந்த பேரணி, பங்களாமேட்டில் தொடங்கி, மதுரை ரோடு, பழைய பஸ்ஸ்டாண்ட், பெரியகுளம் ரோடு உட்பட முக்கிய வீதிகளின் வழியாக வந்தது. பாலித்தின் ஒழிப்போம், மரக்கன்றுகள் நட்டு வளர்ப்போம், துய்மை நகரை உருவாக்குவோம் என விழிப்புணர்வு கோஷங்கள் எழுப்பப்பட்டன.
இதில், பெரியகுளம் எம்.எல்.ஏ., சரணவக்குமார், தேனி நகராட்சி தலைவர் ரேணுப்பிரியா பாலமுருகன், துணைத்தலைவர் வழக்கறிஞர் செல்வம், கமிஷனர் வீரமுத்துக்குமார், கவுன்சிலர் நாராயணபாண்டி உட்பட பலர் பங்கேற்றனர்.