தேனி மருத்துவமனையில் தடுப்பு வேலிக்குள் நோயாளிகள் காத்திருப்பு அறை

தேனி அரசு மருத்துவக் கல்லுாரி மருத்துவமனையில் நோயாளிகள் காத்திருப்பு அறை தடுப்பு வேலி போட்டு மூடப்பட்டுள்ளது;

Update: 2021-11-21 14:15 GMT
தேனி அரசு மருத்துவக்கல்லுாரி மருத்துவமனையில் நோயாளிகள் காத்திருக்கும் அறை தடுப்பு வேலி போட்டு மூடப்பட்டுள்ளது.

தேனி அரசு மருத்துவக்கல்லுாரி மருத்துவமனையில் நோயாளிகள் காத்திருக்கும் அறை தடுப்பு வேலி போட்டு மூடப்பட்டுள்ளது.

தேனி அரசு மருத்துவக் கல்லுாரியில் நோயாளிகள் காத்திருக்க தனியாக விரிவான அறை கட்டப்பட்டுள்ளது. இந்த அறையில் நோயாளிகள் அமர்ந்து ஓய்வெடுக்க அனைத்து வசதிகளும் உள்ளன. ஆனால் இதனை மருத்துவக் கல்லுாரி நிர்வாகம் மூடி வைத்துள்ளது. இதனால் நோயாளிகளும், நோயாளிகளுடன் வருபவர்களும் வெயிலில், மரத்தடியில் காத்திருந்து பெரும் சிரமத்திற்கு உள்ளாகின்றனர்.

இது குறித்து மருத்துவமனை நி்ர்வாகத்தின் கவனத்திற்கு கொண்டு சென்ற போது, நோயாளிகள் காத்திருக்கும் அறையினை அசுத்தப்படுத்தி விடுகின்றனர். சுத்தம் செய்ய போதிய வசதிகளும், பணியாளர்களும் இல்லை. எனவே மூடி வைத்துள்ளோம்' என்றனர்.

Tags:    

Similar News