தேனியில் 2008ம் ஆண்டு பேட்ச் போலீசார் 'கெட் டூ கெதர்' கொண்டாட்டம்

தேனி மாவட்டத்தில் 2008ம் ஆண்டு பேட்ச் போலீசார் இணைந்து வைகை அணையில் கெட் டூ கெதர் கொண்டாடினர்.

Update: 2021-12-17 02:43 GMT

வைகை அணையில் கெட் டூ கெதர் கொண்டாடிய போலீசார், குரூப் போட்டோ எடுத்துக் கொண்டனர்.

தேனி மாவட்டத்தில் பணிபுரியும் 2008 பேட்ச் போலீசார் தாங்கள் பணியில் சேர்ந்து 13 ஆண்டுகள் நிறைவடைந்து 14ம் ஆண்டு தொடங்கியதை கொண்டாடினர். இதற்காக அனைவரும் ஒருமுகமாக விடுப்பு, பெர்மிஷன் எடுத்து தேனி போலீஸ் நிர்வாகத்திடம் அனுமதி பெற்று இருந்தனர்.

வைகை அணையில் இவர்கள் ஒன்று கூடி விருந்துகளுடன் கொண்டாட்டம் நடத்தினர். தங்களது பணிச்சூழல், பணி நெருக்கடி, பணி சவால்கள், பணித்திறன்கள், குடும்ப சூழ்நிலை, எதிர்கொள்ளும் சவால்கள் உள்ளிட்ட விஷயங்களை மனம் விட்டு பேசிக்கொண்டனர். ஆண்டுதோறும் ஒரு சில மணி நேரமாவது தாங்கள் ஒன்று கூடி கெட் டூ கெதர் கொண்டாட வேண்டும் என முடிவு செய்தனர்.

வழக்கமாக பள்ளி, கல்லுாரி முன்னாள் மாணவர்கள் நடத்தும், கெட் டூ கெதர் தற்போது பணியில் இருக்கும் போலீசார் வரை பரவி இருப்பது நல்ல விஷயமாக தோன்றுவதாகவும், இதன் மூலம் இவர்களது பணித்திறன், பணியில் குழு செயல்பாடு அதிகரிக்கும் என அதிகாரிகள் நம்பிக்கை தெரிவித்தனர்.

Tags:    

Similar News