பழனி முருகன் கோயில் தைப்பூசத் திருவிழா எப்போது?

வருகின்ற ஜனவரி 19ஆம் தேதி பழனி தைப்பூசத் திருவிழா கொடியேற்றுதலுடன் துவங்க உள்ளது.;

Update: 2024-01-05 06:59 GMT

இத்திருவிழா தொடர்ந்து பத்து நாட்களுக்கு நடைபெறும். பழனி அருள்மிகு தண்டாயுதபாணி சுவாமி திருக்கோயிலில் 2024ம் ஆண்டு தைப்பூசத் திருவிழா 19.01.2024ம் தேதி துவங்கி 28.01.2024ம் தேதியுடன் நிறைவுபெறுகிறது.

திருவிழா நடைபெறும் இடம் : அருள்மிகு பெரியநாயகியம்மன் திருக்கோயில், பழனி.

கொடியேற்றம் : 19.01.2024 காலை 7.30 மணிக்கு மேல் 8.30 மணிக்குள்.

திருக்கல்யாணம் : 24.01.2024 இரவு 7.00 மணிக்கு மேல் 8.00 மணிக்குள்.

வெள்ளி ரதம் : 24.01.2024 இரவு 09.00 மணிக்குமேல்

தைப்பூசம் : 25.01.2024 அன்று தைப்பூசம்

திருத்தேரோட்டம்: 25.01.2024 அன்று மாலை 04.30 மணிக்குமேல்

தெப்பத்தேர் : 28.01.2024 இரவு 07.00 மணிக்கு மேல்

திருவிழா நிறைவு : 28.01.2024 இரவு 11.00 மணிக்கு மேல் கொடியிறக்கம். திருக்கோயில் பழக்க வழக்கப்படி 25.01.2024 தைப்பூச திருவிழா நடைபெறுகிறது.

Tags:    

Similar News