அகண்ட பாரதம் கனவு விரைவில் நனவாகுமா?

அடுத்த பாராளுமன்ற தேர்தலுக்கு முன்பு பாக்., ஆக்கிரமிப்பு காஷ்மீர் இந்தியாவுடன் இணைக்கப்படும் ?

Update: 2023-03-12 15:30 GMT

பைல் படம்

இதற்கு விடை தேடுமுன் சில கேள்விகளுக்கு பதிலை தேடினால் அதற்கான தகவல்கள் கிடைக்கும்! அடுத்த தேர்தலில் பாஜகவின் இலக்கு 400 பிளஸ். இன்னும் சொல்லப்போனால் தேர்தலுக்கு பிந்தைய கூட்டணியாக 450 பிளஸ் டார்கெட் செய்கிறது. அது சாத்தியமா? எப்படி?

மொத்தம் 543 பாரளுமன்ற தொகுதிகள், அதில்தமிழ்நாடு+ : 40 (39+1),ஆந்திரா+: 42 (25+17),கேரளா: 20பஞ்சாப் :12மேற்கு வங்கம்: 42ஒடிஷா: 21இந்த நான்கு மாநிலங்களில் மொத்தம் 177 சீட்டுக்களை குறைத்தால் 366 சீட்டுக்களே மிஞ்சும் எனும்போது எப்படி 400 பிளஸ் எப்படி சாத்தியமாகும்?

அதற்கு மிக முக்கியமான சில நிகழ்வுகள் இந்தியாவில் தேர்தலுக்கு முன்பு நடந்தே ஆக வேண்டும். அதற்கு பாஜகவிற்கு மிக சாதகமான, ஆதரவான ஒரு பெரிய அலை வீசவேண்டும்! எதிர்கட்சிகள் மீது ஒரு எதிர்ப்பு அல்லது அதிருப்தி, வெறுப்பு பரவ வேண்டும். எதிர்கட்சிகள் தேர்தல் வேலையை செய்ய முடியாத ஒரு சூழல் வேண்டும். உலக நாடுகளின் ஆதிக்கம், குறிப்பாக மீடியா ஆதிக்கம் மிகப்பெரிய அளவில் கட்டுப்படுத்த வேண்டும், அல்லது அதன் நம்பிக்கையை கேள்விக்கு உரியதாக்க வேண்டும். அதற்கு முக்கியமான நிகழ்வு பாஜகவின் மீது சந்தேகத்திற்கு அப்பாற்பட்ட ஒரு நம்பிக்கையை மக்களிடம் ஆழமாக விதைத்தால் மட்டுமே அது சாத்தியம். இதற்கான பணிகள் தான் திரைமறைவில் தொடங்கி உள்ளன.

அதில் ஏற்கனவே சில நிகழ்வுகள் முடிந்து விட்டது. காஷ்மீர் பிரச்சினை, ராமர் கோயில் விவகாரம் இரண்டும் வெற்றிகரமாக முடிக்கப்பட்டது. ஆனால் இவை எல்லா மக்களிடமும், குறிப்பாக மேற்சொன்ன மாநிலங்களில் பெரிய ஆதரவு நிலையை ஏற்படுத்தவில்லை.

மீண்டும் சென்ற பாராளுமன்ற தேர்தலில் வெற்றிக்கான காரணத்தில் பதான்கோட் அட்டாக் முக்கிய பங்கு வகித்தது என்பதை திரும்பி பார்க்க வேண்டும். அதுபற்றி மீடியாவில் அப்படி ஒன்று நடக்கவேயில்லை என்று எதிர்கட்சிகள் எத்தனை திசை திருப்பங்கள் செய்தாலும் அதை மக்கள் நம்பவில்லை. காரணம் இந்தியர்களின் நாட்டுப்பற்று என்பது ஒரு வகையான வெறியே! அது போல அடுத்த தேர்தலில் என்ன நடக்க வாய்ப்புகள் உண்டு?

நம்மிடம் மீதம் இருக்கும் இன்னொரு மிகப்பெரிய பிரச்சினை என்பதைவிட ஆறாத வடு என்றால் அது காஷ்மீரின் ஒரு பகுதி PoK எனப்படும் Pakistan occupied Kashmir. இதன் ஒரு பகுதி பாகிஸ்தானிடமும், மறுபகுதி (Ladak) சீனாவிடமும் இருப்பது தான். அதை இதந்தியாவுடன் சேர்ப்பது என்பது ஒவ்வொரு இந்தியனின் வாழ்நாள் கனவு. அது நடந்தால் ஒவ்வொரு இந்தியனும் அடையும் புலங்காகிதம் அளவற்றது.

அப்படி ஒரு நிகழ்வு ஏற்பட்டால், மக்கள் யாருக்கு வாக்களிப்பார்கள்? அதிலொரு பகுதி சீனாவிடம் உள்ளது, அது ஒரு சேர இந்தியாவுடன் சேர்க்க வாய்ப்புகள் குறைவு. ஆனால் பாகிஸ்தானிடம் இருக்கும் பகுதி மிக முக்கியமானது. அது இந்தியாவை மத்திய ஆசிய நாடுகளுடன் இணைப்பதன் மூலம், இந்தியாவை ஆப்கன் வழியாக ரஷ்யாவுடன் போக்குவரத்தை விரிவுபடுத்தி எளிதாக்க முடியும். அப்போது எரிவாயுவை குழாய் மூலமாகவோ அல்லது ரயில்/ரோடு மூலமாகவோ அதை செய்ய முடியும்.

அடுத்து, அது பாகிஸ்தானை சீனாவிடம் இருந்து தரைமார்க்கமாக முற்றிலும் பிரிக்கும். அது சீனாவின் முதலீடுகளை அர்த்தமற்றதாக்கி, பாகிஸ்தானின் ஆதரவை இழக்க வைக்கும். அது சாத்தியமாக வேண்டுமெனில், பின்வரும் நிகழ்வுகள் நிஜப்படவேண்டும். பாகிஸ்தான் வசம் இருக்கும் PoK இந்தியாவுடன் இணைக்கப்படுவது பற்றி அமெரிக்க உளவு சார்ந்த Strategic Prediction அமைப்பு இது பற்றிய வாய்ப்புகளை வெளியிட்டுள்ளது.

கில்கிட்-பால்டிஸ்தானில் உள்ளவர்கள் எங்களை இந்தியா சேர்த்துக்கொள்ள வேண்டும் என்று வீதியில் வந்து மட்டும் போராடவில்லை, அதையும் தாண்டி பாகிஸ்தானின் ராணுவத்தை வெளியேற சொல்லி போராடுகிறார்கள். இப்போது பாகிஸ்தான் ராணுவம் மக்களுக்கு எதிராக திரும்பினால், இந்திய ராணுவம் அவர்களை காக்க உள்ளே நுழையும். ஆனால் அதை எதிர்க்கும் அளவிற்கு பாகிஸ்தான் ராணுவத்திடம் ஆயுதம் மட்டுமல்ல, வாகனங்களுக்கு டீசல் போடவே முடியாத சூழல் நிலவுகிறது. மிக மோசமான நிதி நிலை இருப்பதால், அதனிடம் இருக்கும் ஆயுதங்களை உக்ரைனுக்கு விற்று சமாளிக்கிறது.

மேலும் இந்தியாவின் உளவுத்துறை RAW ஏற்கெனவே பல இடங்களில் ஊடுறுவிவிட்டது எல்லோருக்கும் தெரியும், ஆனால் நமது ராணுவமே அல்லது ஆதரவு தீவிரவாதிகள் என்ற போர்வையில் Target Oriented Task Force அங்கு பெரிய அளவில் ஊடுறுவி விட்டதாக நம்பப்படுகிறது. அதன் காரணமாகவே, அங்கே இருக்கும் பாகிஸ்தான் எதிர்ப்பு தீவிரவாதிகளின் கை ஓங்கி இருகிறது. அவர்களின் ஆதரவால் மக்களுக்கு பாகிஸ்தான் ராணுவத்தின் மீதான பயம் குறைந்துள்ளது. மக்கள் போராட்டம் மூலமாகவே பாகிஸ்தான் ராணுவத்தை விரட்ட தேவையான வேலைகளை, மக்களையும், தீவிரவாதிகளையும் இணைத்து பாக்கிஸ்தானை RAW வெச்சு செய்கிறது.

பாக் ராணுவத்தை மட்டுமல்ல, அங்கே இருக்கும் சீனர்களையும் தாக்குவதால், அவர்களும் உயிருக்கு பயந்து வெளியேறு கிறார்கள். பாகிஸ்தானுக்கு வரும் முதலீடுகள் இதனால் குறைந்துவிட்டது அல்லது நின்றுவிட்டது.வடக்கில் காஷ்மீரிகள், வடமேற்கில் டெஹிரிகி தலிபான்கள், மேற்கில் பலூசிஸ்தான், தெற்கில் சிந்து ஆர்மி என்று நான்கு முக்கிய பாகிஸ்தானின் எதிரிகளை RAW இணைத்து பிரிந்து கிடந்தவர்களை ஒருமுனைப்படுத்தி தாக்குதல்கள் வேகமாவும், அதிகமாவும், பலமாகவும் நடத்துகிறது. இதுவரை 8000 பாகிஸ்தான் ராணுவத்தினர் கொல்லப்பட்டுள்ளனர்.

அதுமட்டுமல்ல இந்தியாவால் தேடப்பட்ட மிக முக்கிய தீவிரவாதிகள் ஒன்றன் பின் ஒன்றாக நான்கு பேர் ஒரே வாரத்தில் கொல்லப்பட்டுள்ளனர். அதனால் தாவூத் இப்ராஹிம் போன்றவர்கள் மரண பயத்தில் ஒடி ஒளிந்து நாட்களை கடத்துகிறார்கள். பல தீவிரவாதிகள் ஒளிந்து திரிவதாகவும், நாட்டை விட்டு வெளியேறி ஆஃப்கானிஸ்தானை ஒட்டிய மலைப்பகுதியில் தஞ்சம் அடைவதாக செய்திகள் வருகிறது.

அடுத்து பாகிஸ்தான் பொருளாதார ரீதியில் Bankrupt ஆக வேண்டும். அநேகமாக இது தவறான எதிர்பார்ப்பு, ஏனெனில் பாகிஸ்தான் ஏற்கனவே Bankrupt ஆகிவிட்டது, அதை அறிவிக்க மட்டுமே இல்லை என்பதே உண்மை நிலை. அப்படி நிகழ்ந்தால் உள் நாட்டில் ஒரு பெரிய குழப்பம் நிகழும். அரசு இயந்திரங்கள் செயலிழந்து வீழும். அங்கே என்றுமே இல்லாத சட்டம் ஒழுங்கு இப்போது என்னவாகும்? அப்படி நிகழும் பட்சத்தில் உள் நாட்டு போர் மூலம் இந்தியாவிற்கு தனியாக ஒரு போர் என்பது தேவை இல்லாமலே காஷ்மீர் எளிதாக இந்தியாவுடன் இணைவது சாத்தியம்.

பாகிஸ்தானுக்கு ஆதரவு நிலை கொண்ட சீனா, அமெரிக்கா சும்மா இருக்குமா? பாகிஸ்தான் ஏற்கனவே வீழ்ந்து விட்ட நிலையில் அதனால் எந்த பிரயோஜனமும் இல்லை. ஆனால் இந்தியாவை எதிர்த்தால், டாடா ஆர்டர் செய்த 850 விமானங்களின் ஆர்டர்களை இழக்க நேரிடும். இப்போது ரிஸசனை சந்தித்து கொண்டிருக்கும் அமெரிக்கா, இங்கிலாந்தால் இதை செய்ய முடியுமா?

சீனா கிழக்கில் தைவானை இணைக்க அமெரிக்காவுடன் ஒரு உரசலை செய்து கொண்டிருக்கும் நிலையில், தென்மேற்கில் இந்தியாவை பகைக்க முடியுமா? இந்தியா காஷ்மீர் பகுதியை மட்டும் இணைக்கப்படப்போகிறதா அல்லது தெற்கில் சிந்து பகுதி, மேற்கில் பலூசிஸ்தான் இந்தியாவுடன் இணைய வாய்ப்புகள் அதிகம். ஆம் கராச்சி உள்பட பாகிஸ்தானின் கடல் சார்ந்த பகுதி முழுவதும் இந்தியாவுடன் பின்பு சேர வாய்ப்புகள் அதிகம். அதில் தென் மேற்கில் இருக்கும் Tehirihi Taliban கள் ஆஃப்கானிஸ்தானுடன் இணைக்கப்படலாம். அதற்கும் இந்தியா உதவுவதன் மூலம் ஆப்கானின் உறவு பலப்படும்!!

இதுவெல்லாம் நடப்தால் நாட்டை நேசிக்கும் இந்தியர்களின் ஓட்டு யாருக்கு போகும்? தமிழ்நாட்டில் 40/40 யாருக்கு போகும்? அதிமுக என்ன செய்யும்? ஒடிஷா, ஆந்திரா, பஞ்சாபில் புரிந்துணர்வுடன் கூடிய ஒரு கூட்டணி உருவாகும். தேர்தலுக்கு பின்பு மீதி இருக்கும் மதில்மேல் பூனைகள் மட்டுமல்ல, மமதா போன்ற தலைவர்களும் தங்கள் மீதிருக்கும் வழக்கினை கருத்தில் கொண்டு பா.ஜ., அணிக்கு வருவார்கள். அதில் வெற்றி சாத்தியம் இல்லாத ஒரே ஒரு பகுதி கேரளா மட்டுமே. விரைவில் அகண்ட பாரதம் உருவாகுமா என பார்ப்போம். நன்றி: முரு.தெய்வசிகாமணி.

Tags:    

Similar News