சின்னமனுாரில் மனைவியை கொலை செய்த பெயிண்டர் கைது

சின்னமனுாரில் மனைவியை கொலை செய்த பெயிண்டரை போலீசார் கைது செய்தனர்.;

Update: 2022-04-28 02:48 GMT

பைல் படம்.

தேனி மாவட்டம், சின்னமனுார் அழகர்சாமிபுரத்தை சேர்ந்த பெயிண்டர் ராஜேஷ், 40. இவரது மனைவி பிரபா, 34. இவர்களுக்கு இரண்டு குழந்தைகள் உள்ளன. ராஜேஷ் தனது மனைவியை சந்தேகப்பட்டு அடிக்கடி சண்டை போடுவார்.

இந்நிலையில் பிரபா திடீரென இறந்து விட்டார். பிரபாவின் தந்தை தனது மகள் இறப்பில் மர்மம் உள்ளதாக கூறி சின்னமனுார் போலீசில் புகார் செய்தார். சின்னமனுார் போலீசார் பிரபாவின் உடலை மருத்துவ பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.

மருத்துவ பரிசோதனையில் பிரபா கழுத்தை நெறித்து கொலை செய்யப்பட்டது தெரியவந்தது. சின்னமனுார் இன்ஸ்பெக்டர் சேகர் வழக்கு பதிவு செய்து பிரபாவின் கணவர் பெயிண்டர் ராஜேஷை கைது செய்தார்.

Tags:    

Similar News