போடி பகுதியில் ஆடுகளை தாக்கும் ஆட்டுக்கொல்லி நோய் பரவல்

போடி பகுதியில் ஆடுகளுக்கு ஆட்டுக்கொல்லி நோய் அதிகளவில் பரவி வருகிறது.

Update: 2022-01-04 04:35 GMT

போடியில் ஆடுகளுக்கு கால்நடைத்துறையினர்  மருந்துகள் வழங்கி சிகிச்சை அளித்து வருகின்றனர். 

போடி பகுதியில் ஆடுகளுக்கு ஆட்டுக்கொல்லி நோய் பரவி வருகிறது.

போடி மற்றும் சுற்றுக்கிராம பகுதிகளில் ஆடுகளுக்கு ஆட்டுக்கொல்லி நோய் (footfot) பரவி வருகிறது. இந்த நோய் பாதிக்கப்பட்ட ஆடுகளுக்கு வாய், நுரையீரல், கால்கள், ஆசனவாய் பகுதிகளில் புண்கள் ஏற்படுகின்றன. வயிற்றுப்போக்கு ஏற்படுகிறது. உணவு உண்ண முடியாமல் ஆடுகள் உயிரிழக்கின்றன.

இந்த நோய் தீவிரமாக பரவி அதிகளவு ஆடுகள் பாதிக்கப்பட்டுள்ளதால், போடி பகுதி கால்நடைத்துறையினர் ஆடு வளர்க்கும் விவசாயிகளின் வீடுகளுக்கே சென்று மருந்து மாத்திரைகளை வழங்கி வருகின்றனர்.

Tags:    

Similar News