மதுரை குடிநீர் திட்டத்திற்கு எதிர்ப்பு: கூடலூரில் நாற்று நட்டு நூதன போராட்டம்

கூடலுாரில் உண்ணாவிரத போராட்டத்தின் 3வது நாளான இன்று பெண்கள் ரோட்டோரம் துணி துவைத்தும், நாற்றுகளை நட்டும் போராட்டம் நடத்தினர்.

Update: 2022-05-09 12:11 GMT

கூடலுாரி்ல் பொதுமக்கள் தெருவோரம் துணி துவைத்தும், நாற்று நட்டும் போராட்டம் நடத்தினர்.

கூடலுார் லோயர்கேம்ப்பில் இருந்து குழாய் வழியாக மதுரைக்கு குடிநீர் கொண்டு செல்ல வேண்டாம். ஆற்றின் வழியாக வைகை அணை வரை குடிநீரை கொண்டு சென்று, வைகை அணையில் இருந்து குழாய் மூலம் மதுரைக்கு கொண்டு செல்லுங்கள். குழாய் மூலம் குடிநீர் கொண்டு சென்றால் தேனி மாவட்டத்தின் நிலத்தடி நீர் மட்டம் பாதிக்கப்படும் என கூடலுார் முல்லைச்சாரல் விவசாயிகள் சங்கம், பாரதீய கிஷான் விவசாய சங்கம் உட்பட பல்வேறு விவசாய சங்கங்களும், சமூக அமைப்புகளும் போராட்டம் நடத்தி வருகின்றனர்.

இவர்களின் எதிர்ப்பை மீறி கடந்த வாரம் கூடலுாரில் விவசாயிகள் திட்டப்பணிகளை தொடங்கினர். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து, மறியல் நடத்தி ஏராளமானோர கைதாகினர். பின்னர் திட்டத்தை மாற்று வழிகளில் செயல்படுத்த வலியுறுத்தி கூடலுாரில் தொடர் உண்ணாவிரத போராட்டம் நடத்தி வருகின்றனர். மூன்றாவது நாளான இன்று, உண்ணாவிரத போராட்ட திடலில் இருந்து பெண்கள், ரோட்டோரம் துணி துவைத்தும், நாற்றுகளை நட்டும் போராட்டம் நடத்தினர்.

Tags:    

Similar News