513 இடங்களுக்கு ஒரே ஒரு மனு இரண்டாவது நாளும் 'வெறிச்'

தேனி மாவட்டத்தில் 513 நகர்ப்புற உள்ளாட்சி பதவிகளுக்கு இரண்டாவது நாளான இன்று ஒரே ஒரு மனு மட்டும் தாக்கலாகி உள்ளது.

Update: 2022-01-29 14:15 GMT

பைல் படம்.

தேனி மாவட்டத்தில் ஆறு நகராட்சிகளில் 177 வார்டு உறுப்பினர்களும், 22 பேரூராட்சிகளுக்கு 336 வார்டு உறுப்பினர்களும் தேர்வு செய்ய தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது. வேட்புமனு தாக்கல் தொடங்கி இரண்டாவது நாளான இன்று பெரியகுளம் நகராட்சியில் மட்டும் ஒரே ஒரு மனு மட்டும் தாக்கலாகி உள்ளது. வேறு எங்குமே இரண்டாவது நாளும் மனுதாக்கல் நடைபெறவில்லை. நாளை ஞாயிறு விடுமுறை. நாளை மறுநாள் திங்கள்கிழமை தை அமாவாசை என்பதால் மனுதாக்கல் களைகட்டும் என நம்புவதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

Tags:    

Similar News