பொறியியல் கல்லுாரி மாணவர்களுக்கு இணையவழி குற்றத்தடுப்பு விழிப்புணர்வு
தேனி நாடார் சரஸ்வதி பொறியியல் கல்லுாரி மாணவ, மாணவிகள் பங்கேற்ற இணைய வழி குற்றத்தடுப்பு விழிப்புணர்வு கருத்தரங்கம் நடைபெற்றது.;
தேனி நாடார் சரஸ்வதி பொறியியல் கல்லுாரி மாணவ, மாணவிகள் பங்கேற்ற இணைய வழி குற்றத்தடுப்பு விழிப்புணர்வு கருத்தரங்கம் நடைபெற்றது.
கல்லுாரி வளாக அரங்கில் நடைபெற்ற இந்த கருத்தரங்கிற்கு கல்லுாரி செயலாளர் காசிபிரபு தலைமை வகித்தார். இணைச் செயலாளர் ராஜ்குமார், மாணவர்கள் கூட்டமைப்பு தலைவி ஜனனிபிரியா, முதல்வர் மதளைசுந்தரம் உட்பட பலர் பங்கேற்றனர்.
தேனி சைபர் கிரைம் இன்ஸ்பெக்டர் அரங்கநாயகி, எஸ்.ஐ., அழகுபாண்டி, போலீசார் ராஜபிரபு, ஜெயப்பிரகாஷ், ஜெகதீசன், துணை முதல்வர் மாதவன், வேலை வாய்ப்பு அலுவலர் கார்த்திகேயன், பேராசிரியர் பிரதாப், வேம்பத்துார் ராஜேஷ், இயந்திரவியல் கூட்டமைப்பு மாணவர் ஆனந்தகுமார் மற்றும் கல்லுாரி மாணவ, மாணவிகள் பங்கேற்றனர்.
இணைய வழியில் நடைபெறும் குற்ற வழிமுறைகள், அதில் இருந்து மாணவ, மாணவிகள் தங்களை பாதுகாத்துக் கொள்ளும் முறைகள், போலீஸ் நிர்வாகத்தின் காவலன் செயலி பயன்படுத்தும் விதம் உட்பட அனைத்து விவரங்கள் குறித்தும் விளக்கி விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.