கடமலைக்குண்டு அருகே டூவீலர் விபத்தில் ஒருவர் உயிரிழப்பு

கடமலைக்குண்டு அருகே டூ வீலர் தடுமாறி விழுந்த விபத்தில் ஒருவர் உயிரிழந்தார்.

Update: 2022-05-19 13:18 GMT

பைல் படம்.

தேனி மாவட்டம், சின்னமனுார் அருகே சீலையம்பட்டி மேற்கு தெருவை சேர்ந்தவர் பாண்டி, 54. இவர் குமணன்தொழுவிலுள்ள தனது மகள் பிரேமாவை பார்க்க டூ வீலரில் சென்றுள்ளார். 

கடமலைக்குண்டு தேவராஜ் நகர் சாலையில் சென்று கொண்டிருந்த போது, டூ வீலர் நிலைதடுமாறி தடுப்புச்சுவரில் மோதி விபத்துக்குள்ளானது. இதில் கீழே விழுந்து பாண்டி பலத்த காயமடைந்தார். இதனையடுத்து மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

இதுகுறித்து கடமலைக்குண்டு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

Similar News