சர்வேத்துறையின் மெத்தனத்தால் ஒரு கோடி ரூபாய் முடக்கம்

தேனி மாவட்ட சர்வே துறையின் மெத்தனத்தால் ஒரு கோடி ரூபாய் பல மாதங்களாக முடங்கி கிடக்கிறது.

Update: 2022-03-20 11:34 GMT

ஆண்டிபட்டிஒன்றியம், டி.சுப்புலாபுரம் ஊராட்சி அலுவலகம், குடிநீர் மேல்நிலை தொட்டி, ரேஷன் கடை, ஒருங்கிணைந்த பெண்கள் சுகாதார வளாகம் கட்ட மத்திய, மாநில அரசுகள் இணைந்து ஒரு கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்துள்ளன. இந்த பணம் வந்து பல மாதங்கள் ஆகி விட்டன. கிராம ஊராட்சி நிர்வாகம், இந்த பணிகளை செய்ய ஐந்து இடங்களை தேர்வு செய்து வைத்துள்ளது. ஆனால் வழக்கம் போல் சர்வேத்துறை போக்கு காட்டி வருகிறது. பல மாதங்களாக ஊராட்சி ஒன்றிய நிர்வாகம் கேட்டும், இந்த இடங்களை சர்வே செய்து தர சர்வேத்துறை முன்வரவில்லை. இதனால் இதற்கென ஒதுக்கப்பட்ட நிதி முடங்கி கிடக்கிறது. இந்த வசதிகள் இல்லாததால் மக்களின் தவிப்பும் தொடர்கிறது. வழக்கமாக சர்வேத்துறையினரின் மெத்தனத்தால் பொதுமக்கள் பாதிப்புக்கு உள்ளாவது தவிர்க்க முடியாத அம்சமாக இருந்து வந்தது. இப்போது ஒருபடி மேலே போய், ஊராட்சி நிர்வாகமும் பாதிக்கப்பட்டுள்ளது.

Tags:    

Similar News