தேனி மாவட்டத்தில் ஒரே நாளில் 60,680 பேருக்கு கொரோனா தடுப்பூசி

தேனி மாவட்டத்தில் இன்று ஒரே நாளில் 410 மையங்கள் மூலம் பொதுமக்களுக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டுள்ளது.

Update: 2021-10-10 12:00 GMT

இன்று தேனியில் கொரோனா தடுப்பூசி போடப்படும் மையத்தை கலெக்டர் முரளீதரன் பார்வையிட்டார்.

தேனி மாவட்டத்தில் இன்று ஒரே நாளில் 60 ஆயிரத்து 680 பேருக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டுள்ளது.

மாவட்டம் முழுவதும் இதற்காக 410 இடங்களில் தடுப்பூசி மையங்கள் அமைக்கப்பட்டிருந்தன. இந்த மையங்களை ஆய்வு செய்த கலெக்டர் முரளீதரன் கூறுகையில், 'தேனி மாவட்டத்தில் இன்று வரை 5 லட்சத்து 95 ஆயிரத்து 11 பேர் முதல் டோஸ் தடுப்பூசியும், 2 லட்சத்து 25 ஆயிரத்து 742 பேர் இரண்டாம் டோஸ் தடுப்பூசியும், மாற்றுத்திறனாளிகள் 12 ஆயிரத்து 604 பேருக்கு இரண்டு டோஸ் தடுப்பூசியும் போடப்பட்டுள்ளது. இன்று ஒரே நாளில் மட்டும் 60 ஆயிரத்து 680 பேருக்கு தடுப்பூசி போடப்பட்டுள்ளது' என்றார் ஆட்சியர்

Tags:    

Similar News