கேரளாவில் ஒமிக்ரான் பாதிப்பு- தேனி மாவட்டத்தில் உஷார்
கேரளாவில் ஒமிக்ரான் பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளதால், தேனி மாவட்டத்தில் சுகாதாரத்துறை உஷார் அடைந்துள்ளது.;
ஒமிக்ரான் கொரோனா வைரஸ், டெல்டா வைரசை விட அதிக வேகமாக பரவக்கூடியது. இந்நிலையில் கேரள மாநிலம் எர்ணாகுளத்தை சேர்ந்த ஒரு டாக்டருக்கு, ஒமிக்ரான் வைரஸ் தொற்று கண்டறியப்பட்டுள்ளது. அவர் இங்கிலாந்தில் இருந்து வந்தவர். ஒமிக்ரான், வேகமாக பரவும் தன்மை கொண்டதால், தேனி மாவட்ட சுகாதாரத்துறை அதிகாரிகள் உஷார் நிலையில் உள்ளனர்.
காரணம் தேனி மாவட்டமும், கேரளாவின் இடுக்கி மாவட்டமும் வாழ்வியல் தொடர்புகளில் பின்னிப்பிணைந்துள்ளன. இது மாவட்டங்களுக்கும் இடையே தினமும் பல ஆயிரம் பேர் பயணம் மேற்கொள்கின்றனர். இதனால் கேரளாவில் பரவும் வைரஸ் தேனி மாவட்டத்திற்குள் எந்த நிமிடமும் நுழைந்து விடும். எனவே தான், தேனி மாவட்ட சுகாதாரத்துறை அதிகாரிகள் உஷார் நிலையில் உள்ளனர். தேனி மாவட்டத்தில் தகுதி வாய்ந்தவர்களில், 85 சதவீதம் பேருக்கு தடுப்பூசி போடப்பட்டுள்ளது. எனவே தொற்று பரவல் பெரிய பாதிப்பினை ஏற்படுத்தாது. அதே நேரம், இதனை மிகவும் சாதாரணமாக கையாளக்கூடாது என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.