போதையில் கிணற்றில் விழுந்த முதியவர் பலி
மதுபோதையில் கிணற்றில் தவறி விழுந்த முதியவர் பலியான சம்பவம் தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.;
உத்தமபாளையம் டி.தம்மிநாயக்கன்பட்டி காலனியை சேர்ந்தவர் சுப்பிரமணி, 60. இவர் மதுபோதையில் அப்பகுதியில் உலவிக் கொண்டிருந்தார். அப்போது அங்குள்ள ஒரு பாழடைந்த தண்ணீர் இல்லாத கிணற்றுக்குள் தவறி விழுந்து உயிரிழந்தார். இதனையடுத்து தகவல் அறிந்த தீயணைப்பு படையினர் கிணற்றில் தவறி விழுந்த முதியவரின் உடலை மீட்டனர். இச்சம்பவம் தொடர்பாக சின்னமனுார் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.