தமிழக முதல்வர் ஸ்டாலின் ஏப்.30 ல் தேனி வருகை

தமிழக முதல்வர் ஸ்டாலின் வரும் ஏப்., 30ம் தேதி தேனிக்கு வருகிறார் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.;

Update: 2022-04-19 11:45 GMT

தமிழக முதல்வர் ஸ்டாலின் வரும் ஏப். 30ம் தேதி தேனிக்கு வருகிறார் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இது குறித்து தேனி கலெக்டர் முரளீதரன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியுள்ளதாவது: தமிழக முதல்வர் ஸ்டாலின் வரும் ஏப்., 30ம் தேதி சனிக்கிழமை தேனி வருகிறார். தமிழக அரசு சார்பில் செய்து முடிக்கப்பட்ட வளர்ச்சிப்பணிகளை மக்கள் பயன்பாட்டிற்கு அர்ப்பணிக்கிறார். புதிய வளர்ச்சிப்பணிகளுக்கு அடிக்கல் நாட்டுகிறார். பல்வேறு அரசுத்துறைகள் சார்பில் பல ஆயிரம் பேருக்கு நலத்திட்ட உதவிகள் வழங்குகிறார். இந்நிகழ்ச்சிகளில் அமைச்சர்கள், எம்.பி.,க்கள், எம்.எல்.ஏ.,க்கள், உள்ளாட்சி பிரதிநிதிகள் பங்கேற்கின்றனர். இவ்வாறு தெரிவித்துள்ளார்.

Tags:    

Similar News