தேனி மாவட்டம் முழுவதும் மீன் விற்பனை குறித்து அதிகாரிகள் ஆய்வு

தேனி மாவட்டம் முழுவதும் வேதிப்பொருளில் பதப்படுத்தப்பட்ட மீன்களை அழிக்கும் ஆய்வுப்பணிகள் நடைபெற்று வருகிறது.;

Update: 2022-01-11 07:15 GMT

பெரியகுளம் மீன் மார்க்கெட்டில் அதிகாரிகள் மீன்களை ஆய்வு செய்தனர். 

தேனி மாவட்டம், பெரியகுளம், போடி, ஆண்டிபட்டி, தேனி உட்பட பல பகுதிகளில் வேதிப்பொருளில் பதப்படுத்தப்பட்ட மீன் விற்பனை செய்யப்படுகிறது என பொதுமக்கள் தொடர்ந்து புகார் எழுப்பி வந்தனர். இதையடுத்து, வைகை அணை மீன்வளத்துறை உதவி இயக்குனர் பஞ்சராஜா தலைமையிலான அதிகாரிகள் பெரியகுளத்தில் ஆய்வு நடத்தினர். இதில், வேதிப்பொருளில் பதப்படுத்தப்பட்ட 200 கிலோ மீன்களை கைப்பற்றி அழித்தனர்.

மீன்களை விற்ற சிறு வியாபாரிகள் எச்சரித்து அனுப்பி வைக்கப்பட்டனர். இனிமேல் இது போல் குற்றம் கண்டறியப்பட்டால் நடவடிக்கை எடுக்கப்படும், மாவட்டம் முழுவதும் தொடர்ந்து சோதனை நடத்தப்படும் எனவும் அதிகாரிகள் தெரிவித்தனர். அதேபோல் இன்று காலை முதல் மாவட்டம் முழுவதும் மீன்வளத்துறை அதிகாரிகள், உணவுப்பாதுகாப்புத்துறை அதிகாரிகள், உள்ளாட்சித்துறை அதிகாரிகள் இணைந்து ஆய்வுப்பணிகளை நடத்தி வருகின்றனர்.

Tags:    

Similar News