கஞ்சா வியாபாரிகளின் சொத்துக்களை முடக்க அரசு தீவிர நடவடிக்கை

மாநிலம் முழுவதும் கஞ்சா வியாபாரிகளின் சொத்து விவரங்கள் ரகசியமாக சேகரிக்கப்பட்டு அவற்றை முடக்க நடவடிக்கை எடுக்கப்படுகிறது.

Update: 2022-04-27 05:12 GMT

கடந்த மாதம் முதல் கஞ்சா வியாபாரிகள், அவர்களின் நெருங்கிய உறவினர்களின் சொத்துக்களை முடக்க வேண்டும் என போலீஸ் நிர்வாகம் பரிந்துரை செய்தது. இதனை கோர்ட்டும் ஏற்றுக் கொண்டு கஞ்சா விற்பனை மூலம் சம்பாதித்த ஒட்டுமொத்த சொத்துக்களையும் பறிமுதல் செய்ய வேண்டும் என உத்தரவும், அதற்கான அனுமதியும் வழங்கியது.

இதனை தொடர்ந்து இதுவரை கைது செய்யப்பட்ட சில கஞ்சா வியாபாரிகளின் அசையும் சொத்துக்கள், அசையா சொத்துக்கள், வங்கி கணக்குகள் முடக்கப்பட்டுள்ளன. மாநிலம் முழுவதும் உள்ள கஞ்சா மொத்த மற்றும் சில்லரை வியாபாரிகள் குறித்து கணக்கெடுக்கப்பட்டு, அவர்களின் சொத்து விவரங்கள், அவர்களின் நெருங்கிய உறவினர்களின் சொத்து விவரங்கள் கணக்கெடுக்கப்பட்டு வருகிறது. இந்த கணக்கெடுப்பு பணியில் போலீசாரும், வருவாய்த்துறையினரும் ஈடுபட்டு வருகின்றனர். தேவைக்கு ஏற்ப சில இடங்களி்ல் பிற அரசுத்துறைகளும் உதவிக்கு அழைக்கப்பட்டுள்ளன.

கணக்கெடுப்பு பணிகள் முடிந்த பின்னர், கஞ்சா மொத்த மற்றும் சில்லரை வியாபாரிகள் அவர்களது நெருங்கிய உறவினர்கள் அத்தனை பேரின் சொத்துக்களும் முழுமையாக பறிமுதல் செய்யப்பட்டு அரசு கணக்கில் சேர்க்கப்படும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.

Tags:    

Similar News