தேனி மாவட்டத்தில் நவ 20, 21 -இல் வாக்காளர் சேர்க்கை சிறப்பு முகாம்கள்
தேனி மாவட்டத்தில் அனைத்து வாக்குச்சாவடிகளிலும் சனி, ஞாயிறு கிழமைகளில் வாக்காளர் சேர்க்கை சிறப்பு முகாம்கள் நடக்கின்றன;
தேனி மாவட்டத்தில் உள்ள அனைத்து வாக்குச்சாவடிகளிலும் வாக்காளர் சேர்த்தல், நீக்கல் கூடுதல் சிறப்பு முகாம்கள் சனி, ஞாயிறு ஆகிய இரு நாள்கள் நடைபெறவுள்ளது..
தமிழகத்தில் கடந்த வாரம் சனி, ஞாயிறு கிழமைகளில் வாக்காளர்கள் சேர்த்தல், நீக்கல் முகாம்கள் நடந்தன. அடுத்த முகாம்கள் வரும் 27 மற்றும் 28ம் தேதி சனி, ஞாயிறு கிழமைகளில் நடைபெறும் என அறிவிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் தமிழகம் முழுவதும் பெய்த பலத்த மழையால் கடந்த வாரம் நடந்த முகாம்களில் மக்கள் பங்கேற்பதில் சிரமம் ஏற்பட்டது. இதனை கருத்தில் கொண்டு நாளையும், நாளை மறுநாளும் (20 மற்றும் 21ம் தேதிகளில்) சிறப்பு முகாம்கள் நடக்க உள்ளதாக தேர்தல் கமிஷன் அறிவித்தது. நாளையும், நாளை மறுநாளும் தமிழகம் முழுவதும் அந்தந்த ஓட்டுச்சாவடிகளில் காலை 9.30 மணி முதல் மாலை 5 மணி வரை முகாம்கள் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.