தேனி மாவட்டத்தில் இன்றும் யாருக்கும் கொரோனா தொற்று இல்லை

தேனி மாவட்டத்தில் இன்றும் யாருக்கும் கொரோனா தொற்று கண்டறியப்படவில்லை என சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.;

Update: 2021-12-13 05:47 GMT

பைல் படம்.

தேனி அரசு மருத்துவக் கல்லுாரி மருத்துவமனையில் நேற்று 157 பேருக்கு கொரோனா தொற்று பரிசோதனை செய்யப்பட்டது. இதன் முடிவுகள் இன்று காலை வெளியாகின.

இதில் யாருக்கும் கொரோனா தொற்று கண்டறியப்படவில்லை. தேனி மாவட்டத்தில் தொற்று பரவல் மிகப்பெரிய அளவில் கட்டுக்குள் வந்துள்ளது. கடந்த நான்கு மாதங்களாகவே மாவட்டத்தில் சைபர் தொற்றுக்களின் (யாருக்கும் இல்லை என்பது) எண்ணிக்கை தான் அதிகம் உள்ளது. இடைஇடையே ஓருவர் அல்லது இருவருக்கு ஏதாவது ஒரு நாளில் பாதிப்பு ஏற்படுகிறது. அவர்களும் எளிதில் குணமடைந்து விடுகின்றனர் என சுகாதாரத்துறையினர் தெரிவித்தனர்.

Tags:    

Similar News