வைகை, முல்லை பெரியாறு ஆறுகளில் வெள்ள பெருக்கு அபாயம் குறைந்தது

தேனி மாவட்டத்தில், வைகை, முல்லை பெரியாறு நதிகளில் வெள்ளப்பெருக்கு அபாயம் குறைந்துள்ளது.

Update: 2021-12-21 02:30 GMT

ஆண்டிபட்டி வைகை ஆற்றில் திறக்கப்பட்டுள்ள தண்ணீர்.

தேனி மாவட்டத்தில் கடந்த ஒரு வாரமாகவே மழை இல்லை. இதனால் முல்லை பெரியாறு அணைக்கு நீர் வரத்து விநாடிக்கு 494 கனஅடியாக குறைந்தது. அணையில் இருந்து விநாடிக்கு 600 கனஅடி தண்ணீர் வெளியேற்றப்பட்டு வருகிறது. முல்லை பெரியாறு நீர் மட்டம் 141.90 அடியாக உள்ளது.

வைகை அணைக்கு நீர் வரத்து விநாடிக்கு 797 கனஅடியாக குறைந்தது. அணையில் இருந்து விநாடிக்கு 800 கனஅடி நீர் திறக்கப்பட்டுள்ளது. நீர் மட்டம் 70.14 அடியாக உள்ளது. மாவட்டத்தில் வைகை ஆறு, முல்லை பெரியாறு, கொட்டகுடி ஆறு, வராகநதி, சண்முகாநதி, மஞ்சளாறிலும் நீர் வரத்து வெள்ளப்பெருக்கு அபாயம் குறைந்து விட்டது.

அதேபோல் கும்பக்கரை அருவி, சின்னசுருளி அருவி, சுருளி அருவி, புலியூத்து அருவி உட்பட அத்தனை அருவிகளிலும் நீர் வரத்து குறைந்து விட்டது. அணைகள், கண்மாய்கள் நிரம்பி உள்ளதால் மாவட்டத்தில் நீர் வளம் சிறப்பாக உள்ளது என அதிகாரிகள் தெரிவித்தனர்.

Tags:    

Similar News