தேர்தல் பணிக்கு செல்லும் ஆசிரியர்களே.. உங்களுக்கு ஒரு பணிவான வேண்டுகோள்..!

தேர்தல் பணிக்கு செல்லும் ஆசிரியர்களுக்கு பணிவான வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது.

Update: 2024-04-18 06:17 GMT

பள்ளிகளில் வரையப்பட்டுள்ள சுவர் ஓவியங்கள்.

தேர்தல் பணிக்குச் செல்லும் ஆசிரியர்களுக்கு, ஆசிரியர்கள் விடுத்திருக்கும்  வேண்டுகோளில் கூறப்பட்டிருப்பதாவது: நாம் செல்லும் ஒவ்வொரு வாக்குச்சாவடியிலும் அப்பள்ளி ஆசிரியர்கள், ஊர்மக்கள் மற்றும் பல நல் உள்ளங்களால் அப்பள்ளியின் உட்புற வெளிப்புற சுவரிலும் ஒவ்வொரு வகுப்பறையிலும் பல வண்ண ஓவியங்களும், பாடத்தொடர்புடைய படைப்புகளும் கற்றல் சார்ந்த ஓவியங்களும் வரையப்பட்டிருக்கும் எழுதப்பட்டிருக்கும்.

அவற்றின் மீது வேட்பாளர்களின் சின்னங்களை பசைகொண்டு ஒட்டி அவர்களின் உழைப்பை பாழாக்கி விடாதீர்கள். மாறாக செல்லோடேப் கொண்டு ஒட்டுங்கள் அல்லது எதுவும் எழுதப்படாத பகுதியில் அதை ஒட்டுங்கள். ஒருநாள் தானே நமக்கென்ன என்று அந்த உழைப்பில் ஒட்டி அதை சிதைக்க வேண்டாம்.


ஏனெனில், அதை உருவாக்க அவர்கள் எத்தனை நாள் கஷ்டப்பட்டிருப்பர் என்று அவர்கள் இடத்தில் இருந்து சிந்தித்து அந்த வகுப்பறையை வாக்குச்சாவடியாக மட்டும் பார்க்காமல் அதில் உள்ள உழைப்பை பார்ப்போம்.நீண்ட சணல் கயிறு கட்டி அதில் சுவரொட்டிகள் தொங்கவிடுங்கள்..

தேர்தல் சுவரொட்டிகள் ஒருநாள் பயன்பாட்டிற்கு மட்டுமே, பள்ளிச் சுவரோவியங்கள் பல ஆண்டுகள் கற்றல் பணிக்கும் பள்ளி மழலை மாணவச் செல்வங்களின் கற்றல் ஆர்வத்தை அதிகரிக்கும் என்பதை மனதில் கொள்ளுங்கள்...

SMART CLASSROOM அமைய உள்ள பள்ளிகள் நமது பள்ளிகள் என்பதனை பெருமையுடன் உணர்வோம் நாம். நன்றியுடன் , ஆசிரியர்கள், இவ்வாறு கூறப்பட்டுள்ளது.

Similar News