சபரிமலை, பழனி பிரசாதத்துடன் வாழ்த்து பரிமாறிய நண்பர்கள்
தேனி மாவட்டத்தில் சபரிமலை, பழனி பிரசாதத்துடன் புத்தாண்டு வாழ்த்துக்களை நண்பர்கள் பகிர்ந்து வருகின்றனர்.
தற்போது சபரிமலை சீசன் மும்முரமான கட்டத்தை எட்டி உள்ளது. அதேபோல் பழனி தைப்பூச சீசனும் நெருங்கி வருகிறது. தேனி மாவட்டத்தில் பழனி, சபரிமலை பக்தர்கள் அதிகளவி்ல் உள்ளனர். இவர்களில் பெரும்பாலானோர் இரண்டு கோயில்களுக்கும் சென்று வழிபடும் பழக்கம் உள்ளவர்கள். இப்படி கோயிலுக்கு செல்லும் போது, சபரிமலையில் அரவணை பாயாசம் பிரசாதம், பழனியில் பஞ்சாமிர்த பிரசாதம் வாங்கி வந்துள்ளனர்.
புத்தாண்டு பிறந்துள்ள நிலையில், நெருங்கிய குடும்ப உறுப்பினர்கள், நண்பர்களுக்கு பிரசாதத்தை கொடுத்து புத்தாண்டு வாழ்த்துக்களை பகிர்ந்து வருகின்றனர். எவ்வளவோ வாழ்த்துக்கள் கிடைத்தாலும் புத்தாண்டு அன்று கிடைத்த சபரிமலை ஐயப்பன் பிராதமும், பழனி முருகன் பிரசாதமும் ஈடு இணை அற்றது, புதிதாக உருவாகி உள்ள இந்த நல்ல பக்தி அணுகுமுறை மிகவும் சிறப்பானது என பிரசாதம் பெற்றவர்கள் பூரிப்புடன் தெரிவித்துள்ளனர்.