வங்கி மோசடி பேர்வழிகளின் புதிய அவதாரம்: சைபர் கிரைம் எச்சரிக்கை

வங்கி மோசடி பேர்வழிகளின் சமீபத்திய நவீன மோசடி குறித்த தகவல்களை தேனி சைபர் கிரைம் போலீசார் வெளியிட்டுள்ளனர்.

Update: 2022-03-25 02:04 GMT

வங்கிமோசடி பேர்வழிகளின் சமீபத்திய நவீன மோசடி நடவடிக்கைகள் குறித்த தகவல்களை வெளியிட்ட தேனி சைபர் கிரைம் போலீசார், விழிப்புடன் இருக்க வேண்டும் என அறிவுறுத்தி உள்ளனர்.

அவர்கள் இது குறித்து கூறியதாவது: நமது வங்கிக் கணக்கில் உள்ள பணத்தை கொள்ளையடிக்க திட்டமிடும் வடமாநில கொள்ளைக்கார கும்பல் நம் ATM Card காலாவதியானதாக கூறி தொலைபேசி மூலம் தொடர்பு கொண்டு Bank Manager பேசுவதாக அரைகுறை தமிழில் பேசி அதன் ரகசிய எண்ணை வாங்கி மோசடி செய்து வந்தது.

தற்போது சமூக வலைதளங்களாலும், தமிழக காவல்துறை மற்றும் வங்கிகள் ஏற்படுத்திய விழிப்புணர்வு பிரச்சாரத்தாலும் மக்கள் விழித்துக் கொள்ள தொடங்கினர். வடமாநில கும்பலின் சாயம் வெளுத்துப் போக அவர்களின் முயற்சி தோல்வியுற்று போனது. இதன் விளைவாக தற்போது தங்களின் யுக்தியை மாற்றி உள்ளனர். அதாவது வாடிக்கையாளர்களின் பரிவர்த்தனை குறித்த தகவல்களை வங்கிகள் குறுஞ்செய்தி (SMS) வாயிலாக வாடிக்கையாளர்களுக்கு அனுப்புவதை அறிந்து கொண்டு தற்போது புதிய முயற்சியை மோசடிப் பேர்வழிகள் மேற்கொள்ள தொடங்கியுள்ளன.

தங்களின் புதிய அவதாரமான குறுஞ்செய்தியில் (SMS) உங்களது கணக்கு முடக்கப்பட்டுள்ளது அதனை சரி செய்ய உடனடியாக கீழ்க்காணும் இணைப்பை சொடுக்குங்கள் என ஆங்கிலத்தில் (Dear A/c Holder Your SBI Bank Documents has expired A/c will be Blocked Update your Document Now visit SBI website http// xxxxxxxxxxxxxxxxxxxxxxx) அனுப்புவார்கள். நாமும் நமது வங்கி கணக்கு முடக்கப்பட்டுள்ளது என்கிற தகவலை கண்டதும் அவசரத்தில் அந்த இணைப்பை சொடுக்கியதும் நமது வங்கி கணக்கில் இருந்து மோசடிப் பேர்வழிகள் பணத்தை திருடி விடுவர்.

இன்றும் கூட +919163743976 என்கிற மோசடி தொலைபேசி எண்ணில் இருந்து மேற்கண்ட குறுஞ்செய்தி (SMS) வருகிறது. பலரும் விழிப்புடன் இருந்ததால் யாருக்கும் பண இழப்பு ஏற்படவில்லை. எனவே வடமாநிலத்தைச் சேர்ந்த வங்கி மோசடிப் பேர்வழிகளின் அடுத்த அவதாரமான போலி குறுஞ்செய்தி (SMS) தகவலை நம்பி எவரும் மோசம் போகாதீர்கள். அனைவரும் விழிப்புடன் இருந்து தங்களின் சேமிப்பை பாதுகாத்துக் கொள்ளுங்கள். இவ்வாறு கூறியுள்ளனர்.

Tags:    

Similar News