பழனி நோக்கி பாதயாத்திரை போலீஸ் பாதுகாப்பு அவசியம்..!
பழனி நோக்கி பாதயாத்திரை செல்லும் பக்தர்களுக்கு இந்த ஆண்டும் போலீசார் பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்ய வேண்டும்.
தேனி மாவட்டத்தில் இருந்து பழனி நோக்கி பல ஆயிரம் பக்தர்கள் பாதயாத்திரை செல்வது வழக்கம். இந்த ஆண்டும் வரும் 25ம் தேதி தைப்பூச திருவிழா வரை இடைவிடாமல் பாதயாத்திரை பக்தர்கள் செல்வார்கள். ஆண்டு தோறும் தேனி மாவட்ட போலீசார் பாத யாத்திரை செல்லும் பக்தர்களுக்கு ஒளிரும் குச்சிகள் வழங்குவார்கள். இருட்டில் அவர்கள் பாதுகாப்பாக நடந்து செல்ல அந்த ஒளிரும் குச்சிகள் உதவியாக இருக்கும்.
முக்கிய சந்திப்புகளில் போலீசார் நின்று வாகனங்களையும் கண்காணிப்பார்கள். இந்த ஆண்டு இதுவரை ஒளிரும் குச்சிகள் வழங்கவில்லை என பழனி பக்தர்கள் தெரிவித்தனர். மாறாக பழனி போலீசார் ஒளிரும் குச்சிகள் வழங்கி வருகின்றனர். பழனிக்குள் சென்ற பின்னர் ஒளிரும் குச்சிகள் எதற்கு. அதற்கு முன்னர் 150 கி.மீ., தொலைவில் இருந்து நடந்து வரும் பக்தர்களுக்கு வழங்க வேண்டும்.
அதேபோல் பக்தர்கள் செல்கின்றனர். கவனமாக வாகனத்தை ஓட்டுங்கள் எனவும் எச்சரிக்கை ஸ்டிக்கர்களை போலீசார் முக்கிய இடங்களில் ஒட்டி வைப்பதும் வழக்கம். இந்த ஆண்டு அதுவும் செய்யவில்லை என பக்தர்கள் கூறுகின்றனர். தேனி மாவட்ட போலீசார், திண்டுக்கல் மாவட்ட போலீசார் இணைந்து பக்தர்கள் பாதுகாப்பாக சென்று வர நடவடிக்கை எடுக்க வேண்டும் என பக்தர்கள் வலியுறுத்தி உள்ளனர்.