தேனி மாவட்டத்தில் அதிவேகமாகப் பரவும் மர்ம காய்ச்சல்

New Fever -தேனி மாவட்டத்தில் அதிவேகமாக பரவும் காய்ச்சல் ஒமிக்ரான் வகையும் இல்லை கொரோனாவும் இல்லை என மருத்துவத்துறை தெரிவித்துள்ளது

Update: 2022-09-10 06:30 GMT

பைல் படம்

New Fever -தேனி மாவட்டத்தில் தென்மேற்கு பருவமழை மிகவும் அதிகமாக பெய்துள்ளது. வழக்கத்தை விட ஒரு மடங்கிற்கும் மேல் அதிகம் மழை பெய்துள்ளது. இந்நிலையில், காய்ச்சல் பாதிப்பு கிடுகிடுவென அதிகரித்து வருகிறது. பெரும்பாலும் பள்ளி, கல்லுாரி மாணவ, மாணவிகளே அதிகம் பாதிக்கப்படுகின்றனர்.

இது கொரோனா வைரஸ் காய்ச்சலும் இல்லை... ஒமிக்ரான் வைரஸ் காய்ச்சலும் இல்லை. வேறு ஒரு சாதாரண வகை வைரஸ் காய்ச்சல். ஆனால் இதன் பதிப்பு கடுமையாக உள்ளது. காய்ச்சல் பாதித்ததில் இருந்து குறைந்தது 48 மணி நேரம் வரை காய்ச்சல் தொடர்கிறது. அதுவும் உச்சபட்ச காய்ச்சல் பதிவாகிறது. 48 மணி நேரம் கழித்தே குறைய தொடங்குகிறது. அடுத்து சகஜநிலைக்கு திரும்பி வர குறைந்த பட்சம் ஐந்து நாள்கள் தேவைப்படுகிறது. இதனால் குழந்தைகள் நல மருத்துவமனைகள், அரசு மற்றும் தனியார் பொதுமருத்துவமனைகள் நிரம்பி வழிகின்றன. வைரஸ் பாதிப்பின் கடுமையில் இருந்து தப்ப, காய்ச்சல் பாதிக்கப்பட்ட உடனே மருத்துவர் ஆலோசனை பெறுவது அவசியம் என மருத்துவத்துறை தெரிவித்துள்ளது.

அடுத்த முக்கியமான செய்திகளை தெரிந்துகொள்ள: Click Here-1, Click Here-2

Tags:    

Similar News