முல்லை பெரியாறு அணை மேற்பார்வை குழுவின் தமிழக உறுப்பினர் நியமனம்
முல்லைப் பெரியாறு அணை மேற்பார்வை குழுவின், தமிழகத்தின் சார்பில் புதிய உறுப்பினராக பொறியாளர் சுப்பிரமணியம் நியமிக்கப்பட்டுள்ளார்.;
முல்லைப்பெரியாறு அணை மேற்பார்வை குழுவின் புதிய உறுப்பினர் சுப்பிரமணியன்.
முல்லைப்பெரியாறு அணை மேற்பார்வை குழுவில் 3 பேர் உள்ள நிலையில், கூடுதலாக 3 பேரை சேர்க்கலாம் என உச்ச நீதிமன்றம் கடந்த ஏப்ரல் 8 ஆம் தேதி உத்தரவு பிறப்பித்திருந்தது. ஏற்கனவே முல்லைப்பெரியாறு அணை மேற்பார்வைக் குழுவின் தலைவராக .குல்சன் ராஜ் மற்றும் தமிழ்நாடு-கேரள அரசின் நீர்வளத்துறைச் செயலாளர்கள் உள்ளனர்.
தமிழகத்தின் உறுப்பினராக பொறியியாளர் ஆர்.சுப்பிரமணியத்தை நியமனம் செய்து தமிழ்நாடு அரசு நேற்று அரசாணை வெளியிட்டுள்ளது. இவர் காவிரி தொழில்நுட்பக்குழு தலைவராக இருந்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. இவரது நியமனத்தை தமிழக ஐந்து மாவட்ட விவசாயிகள் சங்கத்தினர் வரவேற்று உள்ளனர்.