முல்லைப்பெரியாறு அணை நீர் மட்டம் இன்று இரவு 136 அடியை தாண்டும்

முல்லைப்பெரியாறு அணைப்பகுதியில் பெய்து வரும் பலத்த மழையால் அணை நீர் மட்டம் இன்று 136 அடியை தாண்டும் என மதிப்பிடப்பட்டுள்ளது.;

Update: 2022-07-15 03:31 GMT

முல்லைப்பெரியாறு அணை.

முல்லைப்பெரியாறு அணைப்பகுதியில் தொடர்ந்து 10 நாட்களுக்கும் மேலாக பலத்த மழை பெய்து வருகிறது. இன்று காலை 6 மணி நிலவரப்படி பெரியாறு அணையில் 84.6 மி.மீ., மழை பதிவானது. தேக்கடியில் 31.2 மி.மீ., மழை பெய்தது. இதனால் அணைக்கு நீர் வரத்து கிடுகிடுவென உயர்ந்து இன்று காலை 6 மணிக்கு விநாடிக்கு 8200 கனஅடியாக உயர்ந்தது. அணையில் இருந்து விநாடிக்கு 1800 கனஅடி நீர் மட்டுமே திறக்கப்பட்டுள்ளது. நீர் மட்டம் 133.50 அடியை எட்டியது. இதே நிலை நீடித்தால் இன்று இரவுக்குள் 136 அடியை நீர் மட்டம் தாண்டும் என அதிகாரிகள் மதிப்பிட்டுள்ளனர்.

Tags:    

Similar News