முல்லை பெரியாறு அணை விவகாரம்: கருப்பு தினம் அனுசரித்த தேனி மாவட்ட விவசாயிகள்

தேனி மாவட்டத்திலிருந்த தேவிகுளம் பீர்மேடு பகுதிகளை கேரளாவுடன் இணைத்த நவ.1 -ஆம் தேதி கருப்புதினமாக விவசாயிகள் அறிவிப்பு

Update: 2021-11-01 10:00 GMT

பைல் படம்

மொழிவாரி மாநிலங்கள் பிரிக்கப்பட்ட போது, தமிழகத்துடன் இணைந்திருந்த தேவிகுளம், பீர்மேடு, நெய்யாற்றங்கரை, நெடுமாங்காடு, முல்லை பெரியாறு அணை பகுதிகளை நவம்பர் மாதம் முதல் தேதி தான் கேரளாவுடன் இணைத்தனர்.  தமிழகம் இழந்த பகுதிகளை நினைவூட்டும் வகையில் நவம்பர் முதல் தேதியான இன்று கருப்பு தினம் கடைபிடிப்பதாக தேனி மாவட்ட முல்லைச்சாரல் விவசாயிகள் சங்கம், முல்லை பெரியாறு பாசனம் மற்றும் குடிநீர் பாதுகாப்பு சங்கம், தமிழக அனைத்து விவசாயிகள் ஒருங்கிணைப்புக்குழுவினர் அறிவித்தனர். இன்று இந்த துக்க நாளை அனுசரிப்பதாகவும், கருப்பு கொடி ஏற்றி அமைதி காப்பதாகவும் இச்சங்கத்தினர் அறிவித்துள்ளனர்.

Tags:    

Similar News