முல்லைப்பெரியாறு அணை: மத்திய கண்காணிப்பு குழுவிடம் விவசாயிகள் கோரிக்கை

Mullaperiyar Dam Issue- முல்லைப்பெரியாறு அணை நீர் சேமிப்பு தொடர்பாக மத்திய கண்காணிப்பு குழுவிடம் விவசாயிகள் கோரிக்கை வைத்தனர்.

Update: 2022-07-20 04:39 GMT

முல்லைப்பெரியாறு அணை (பைல் படம்)

Mullaperiyar Dam Issue- முல்லைப்பெரியாறு அணைக்கு துணை கண்காணிப்புக்குழு நேற்று வந்தது. அணையை ஆய்வு செய்த பின்னர் ஒன்றாம் மைல் என்ற இடத்தில் ஆலோசனை கூட்டம் நடத்தியது. இந்த இடத்தை தேடிப்பிடித்து விவசாயிகள் சென்றனர். முல்லைச்சாரல் விவசாயிகள் சங்க தலைவர் கொடியரசன், பாரதீய கிஷான் சங்க மாவட்ட தலைவர் சதீஷ்பாபு உட்பட பலர் கண்காணிப்புக்குழுவிடம் மனு கொடுத்து தங்கள் எதிர்ப்புகளை பதிவு செய்தனர்.

அதில், 'அணையின் நீர் மட்டம் 152 அடியாகும். தற்காலிகமாக சுப்ரீம் கோர்ட் 142 அடியாக நிர்ணயித்துள்ளது. இந்நிலையில் சுப்ரீம் கோர்ட் தீர்ப்பு வந்து எட்டு ஆண்டுகளாக ரூல்கர்வ் அமல்படுத்தப்படவில்லை. தற்போது ரூல்கர்வ் அமல்படுத்தி அணை நீர் மட்டத்தை மேலும் குறைக்கிறீர்கள். தண்ணீர் வரும் போது சேமிக்காமல், எப்போது சேமிக்க முடியும்.

அணையினை வெள்ளையடித்து பராமரிக்க கூட கேரளா அனுமதிப்பதில்லை. முழுக்க கேரள போலீசாரை நியமித்து விட்டனர். தமிழக பொதுப்பணித்துறை அதிகாரிகளின் குடியிருப்புகளை பராமரிக்க விடுவதில்லை. காலியாக உள்ள பொதுப்பணித்துறை அதிகாரிகள் பணியிடங்களை நிரப்பவில்லை.

பராமரிப்பு பணிகளுக்கு கட்டுமான பொருட்களை கொண்டு செல்லலாம் என சுப்ரீம் கோர்ட் உத்தரவிட்டும், அதனை கேரள அரசு தடுக்கிறது. இதே நிலை நீடித்தால் நுாற்றுக்கணக்கான விவசாயிகளை திரட்டி கட்டுமானப்பொருட்களை தலைச்சுமையாக கொண்டு செல்வோம் என்றனர். இதனை கேட்ட துணைக்கண்காணிப்புக்குழு அதிகாரிகள் 'அந்த அளவுக்கு உணர்ச்சிவசப்படாதீர்கள். அத்தனை பிரச்னைகளுக்கும் தீர்வு கண்டு விடுவோம்' என விவசாயிகளை சமாதானம் செய்தனர். தவிர ரூல்கர்வ் என்ற பெயரில் ஏன் தண்ணீர் கேரளா பக்கம் திறக்கிறீர்கள். தமிழக அரசும் இதனை தடுக்கவில்லை. நாங்கள் தடுக்கவா? என்ற கேள்வியை எழுப்பினர்.

இதனை கேட்ட பொதுப்பணித்துறை அதிகாரிகள் தமிழகத்திற்கு பாதகம் இல்லாமல் பிரச்னைக்கு தீர்வு காண்கிறோம் என சமாதானம் செய்து அனுப்பி வைத்தனர். தமிழக பொதுப்பணித்துறை அதிகாரிகள் அணையில் தங்கித்தான் பணிபுரிய வேண்டும். காலியாக உள்ள மூன்று உதவி செயற்பொறியாளர் பணியிடங்களை நிரப்ப வேண்டும் எனவும் வலியுறுத்தினர். இந்த விஷயத்தை அரசின் கவனத்திற்கு கொண்டு செல்வோம் எனவும் அதிகாரிகள் உறுதி அளித்தனர்.


அடுத்த முக்கியமான செய்திகளை தெரிந்துகொள்ள: Click Here-1, Click Here-2

Tags:    

Similar News