141 அடியை கடந்த முல்லைப்பெரியாறு: வைகையிலும் வெள்ளப்பெருக்கு

பலத்த மழை தொடர்வதால் முல்லை பெரியாறு அணை நீர் மட்டம் 141 அடியை கடந்தது. வைகை ஆற்றிலும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.

Update: 2021-11-18 03:38 GMT

தேனி மாவட்டத்தில் மழை தொடர்வதால் வைகை ஆற்றில் அதிகளவு தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது.

தேனி மாவட்டத்தில் நேற்று பகல் முழுவதும் பலத்த மழை பெய்தது. மாலை 5 மணிக்கு தொடங்கிய மழை இரவு 11 மணி வரை நீடித்தது. இரவிலும் சாரல் பெய்து கொண்டே இருந்தது. காலையிலும் மழை தொடர்கிறது.

இதனால் முல்லைபெரியாறு அணைக்கு நீர் வரத்து இன்று காலை நிலவரப்படி 3348 அடியாக உள்ளது. இன்னும் சிறிது நேரத்தில் இந்த நீர்வரத்து விநாடிக்கு 5 ஆயிரம் கனஅடியை தாண்டும் என தெரிகிறது. அணை நீர் மட்டம் 141 அடியை கடந்தது. ரூல்கர்வ் முறைப்படி நவம்பர் 30ம் தேதி தான் அணையில் 142 அடி நீர் தேக்க முடியும்.

இதனால் அணைக்கு நீர் வரத்து அதிகரித்தால், கேரளா வழியாக நீர் திறக்கப்படும் சூழல் உருவாகி உள்ளது. இந்த நீரை இந்த முறையாவது தமிழகம் திறக்குமா? அல்லது கடந்தமுறை போன்றே கேரள அரசியல்வாதிகளை வைத்து திறக்க அனுமதிக்குமா? என ஐந்து மாவட்ட விவசாயிகள் எதிர்பார்த்துள்ளனர்.

வைகை அணை நீர் மட்டம் 69.42 அடியாக உள்ளது. அணைக்கு நீ்ர் வரத்து விநாடிக்கு 3294 கனஅடியாக உள்ளது. அணையில் இருந்து விநாடிக்கு 4420 கனஅடி நீர் திறக்கப்பட்டு வருகிறது. இதனால் வைகையில் பெரும் வௌ்ளம் ஏற்பட்டுள்ளது. 

Tags:    

Similar News